அணைக்கட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதவல்லி பாளையம் ஊராட்சி ஏரிக்கோடி பகுதியில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். செதுவாலை மற்றும் மருதவல்லி பாளையம் கிராமத்திற்கு தனிநபர் நிலத்தின் வழியாக சென்று வந்தனர்.
மேலும் மழைக்காலங்களில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் இந்தப் பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என நந்தகுமார் எம்எல்ஏவிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் .
அதன் பேரில் அணைக்கட்டு ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்க செய்யப்பட்டது. இந்த நிலையில் அதற்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது இதில் அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் கலந்துகொண்டு சாலை மற்றும் சிறு பாலம் அமைப்பதற்காக பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
அப்பொழுது சாலையை தரமாக அமைத்து விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார்.