ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்ட கடை போலி ரசீது மூலம் மின் இணைப்பு நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்.?

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் குணராமநல்லூர் ஊராட்சி 15 வது வார்டுக்கு உட்பட்ட மத்தளம் பாறை மெயின் ரோட்டில் 0.324.தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்தின் வடக்கு பக்கம், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் பம்மிங் ஆபீஸ் முன்பு நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து குணராமநல்லூர் ஊராட்சியை சார்ந்த வார்டு உறுப்பினர் ஒருவர் கட்டிடம் கட்டி உள்ளார்

அதற்கு எந்த ஆவணங்களும் இல்லாததால் போலி ரசீது மூலம் மின் இணைப்பு பெற்றுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகிறார்கள்

ஆக்கிரமிப்பு செய்து உள்ள வார்டு உறுப்பினர் ஒரு அரசியல் கட்சியில் உள்ளதாகவும் யார் கேள்வி கேட்டாலும் உன்னால் முடிந்ததை செய்து பார் என்று மிரட்டுவதாகவும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கூறுகின்றார்கள்

தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டி போலி ரசீது மூலம் மின் இணைப்பு பெற்ற நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றார்கள்

மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமா.?

Check Also

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தல்.. மீண்டும் திரு. G. மோகன கிருஷ்ணன் தேர்வு!*

சென்னை உயர்நீதிமன்றத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வழக்கறிஞர் சங்கமான, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு …