கந்தனேரி மணல் குவாரியிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் அணைக்கட்டு தாலுக்கா அலுவலகத்திற்கு வந்தனர்.
தொடர்ந்து கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல சங்க மாநில தலைவர் சங்கர் தலைமையில் தாசில்தாரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட தாசில்தார் வேண்டா இது குறித்து
கனி மனவளத்துறையில் இருந்து மாட்டு வண்டி உரிமையாளர்களின் பட்டியல் கேட்டு தபால் வந்துள்ளது. அப்பொழுது நீங்களும் மனு அளித்திருப்பதால் அந்த குவாரியிலிருந்து அணைக்கட்டு தாலுகாவில் 10 கிலோமீட்டர் வரும் கிராமங்களை சேர்ந்த மாட்டுவண்டி தொழிலாளர்களின் விவரங்களை விரிவாக தயார் செய்து பட்டியலுடன் ஆர்டிஓ விற்கு அனுப்பி வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து
கனிம வளத்துறையினர் உங்களுக்கு அனுமதி வழங்குவார்கள் என்றார்.