தென்காசி மாவட்டம் தென்காசி ஒன்றியம் ,மத்தளம் பாறை ஊராட்சிக்கு உட்பட்ட மாறனேரி குளம் கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயத்துக்கு தேவையான தண்ணீரை திறக்கும் மதகு சேதமடைந்திருப்பதால் நடவு காலங்களில் தண்ணீர் திறக்க முடியாத சூழல் உள்ளது
இக்குளம் சம்மந்தமாக பலமுறை துறை சார்ந்த அலுவலர்களிடம் முறையிட்டும் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள்
அதனால் பருவ மழை காலங்களில் விவசாயம் செய்வதற்கு தண்ணீர் திறக்க முடியவில்லை ஆகையினால் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி