இளைஞரை பாராட்டிய வனத்துறை அதிகாரி, எதற்காக தெரியுமா?

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேர்ணாம்பட்டு கோட்டைச்சேரி பகுதியில் உயர் அழுத்தம் மின் கம்பத்தில் குரங்குகள் விளையாடிக் கொண்டிருந்துள்ளது.

அப்பொழுது எதிர்பாராத விதமாக ஒரு குரங்கு மின் வயரில் பட்டு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட நிலையில் குரங்கு கீழே விழுந்து உயிருக்கு போராடி மயக்கம் அடைந்தது.

இத்தனை பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த கூலி வேலை செய்யும் நிதிஷ் என்ற வாலிபர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குரங்கு வாய் வைத்து மூச்சுக்காற்று கொடுத்து கடுமையாக போராடி குரங்கை காப்பாற்றினார்.

இதனிடையே மின்சாரம் தாக்கி உயிரிழந்த குரங்குக்கு வாயோடு வாய் வைத்து மூச்சு கொடுத்து காப்பாற்றிய இளைஞரை வேலூர் மாவட்ட வனத்துறை அதிகாரி கலாநிதி மற்றும் வனத்துறையினர் நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து பரிசு வழங்கி பாராட்டினார்.

Check Also

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தல்.. மீண்டும் திரு. G. மோகன கிருஷ்ணன் தேர்வு!*

சென்னை உயர்நீதிமன்றத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வழக்கறிஞர் சங்கமான, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு …