பில் கிளின்டனை அச்சுறுத்த முயற்சித்த இஸ்ரேல்?

அமெ­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி பில் கிளின்­ட­னுக்கும் சர்ச்­சைக்­கு­ரிய அவ­ரது பெண் உத­வி­யாளர் மொனிக்கா லிவின்ஸ்­கிக்­கு­மி­டையில் இடம்­பெற்ற பாலியல் ரீதி­யான தொலை­பேசி உரை­யா­டல்க­ளை ரஷ்­யாவும், பிரிட்டனும் ஒலிப்­ப­திவு செய்­த­தா­கவும் அந்த ஒலிப்­ப­திவு நாடாவை இஸ்­ரே­ல் பிர­தமர் அச்­சு­றுத்தி அடி­ப­ணிய வைப்­ப­தற்­கான கரு­வி­யாக பயன்­ப­டுத்த முயற்­சித்­த­தாகவும் புதிய புத்­தகம் ஒன்று உரிமை கோரி­யுள்­ளது.

‘வீக்லி ஸ்டான்டர்ட்’ பத்­தி­ரி­கையின் ஆசி­ரியர் டானியல் ஹால்­பரால் எழு­தப்­பட்ட ‘கிளின்டன், இன்க்’ என்ற நூலே இவ்­வாறு உரி­மை­கோ­ரி­யுள்­ளது.

clinitonink

மொனிக்கா லிவின்ஸ்­கியின் ஆலோ­ச­கர்கள் குழுவால் தொகுக்­கப்­பட்­டி­ருந்த கோப்­பு­க­ளையும் மொனிக்கா லிவின்ஸ்கி மற்றும் ஏனைய பெண்­க­ளு­ட­னான பில்­கி­ளின்­டனின் பதிவு செய்­யப்­பட்ட பாலியல் ரீதி­யான உரை­யா­டல்­க­ளையும் அடிப்­ப­டை­யாக வைத்தே டானியல் ஹால்பர் இந்தத் தக­வலை வெளி­யிட்­டுள்ளார்.

இந்த பாலியல் ரீதி­யான உரை­யா­டல்­களை இஸ்­ரே­லிய பிர­தமர் பெஞ்­ஜமின் நெட்டான்யாஹு, இஸ்­ரே­லுக்­காக உளவு பார்த்த குற்­றச்­சாட்டில் சிறை­யி­ல­டைக்­கப்­பட்ட அமெ­ரிக்­க­ரான ஜொனாதன் போல்­லார்ட்டை விடு­தலை செய்­வ­தற்கு பில் கிளின்­டனை தூண்­டு­வ­தற்­கான கரு­வி­யாக பயன்­ப­டுத்­தி­யி­ருந்­த­தாக அந்தப் புத்­தகம் கூறு­கி­றது.

1998 ஆம் ஆண்டு ஒக்­டோபர் அமெ­ரிக்க மேரி­லான்ட்டில் பில் கிளின்­ட­னுக்கும் நெட்­டான்­யா­ஹு­விற்கும் இடையில் இடம்­பெற்ற சந்­திப்பின் போதே, இஸ்­ரே­லி­யர்கள் மொனிக்­கா­வு­ட­னான பாலியல் உரை­யா­டல்­களை உள்­ள­டக்­கிய மேற்­படி ஒலிப்­ப­திவுகளை இஸ்­ரே­லி­யர்கள் வைத்துள்ளதாகவும், ஜொனாதன் போல்லார்ட்டை விடு­தலை செய்வதற்­கான ஏற்­பா­டு­களை கிளின்டன் மேற்­கொள்ளும் பட்­சத்தில் அந்த ஒலிப்­ப­திவு நாடாக்­களை அழித்­து­வி­டு­வ­தா­கவும் தெரி­வித்­த­தாக அந்த புத்­த­கத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் பில் கிளின்டன் அமெ­ரிக்க தேசிய பாது­காப்பு குழு­வி­னரின் கோபத்திற்கு ஆளாக விரும்­பா­ததால் ஜொனாதன் போல்­லார்ட்டை விடு­தலை செய்யும் தனது முயற்­சி­யி­லி­ருந்து பின்­வாங்­கி­ய­தாக கூறப்­ப­டு­கி­றது.மொனிக்­கா­வுக்கும் பில்­கி­ளி­ன்ட­னுக்­கு­மி­டை­யி­லான பாலியல் உரை­யா­டல்கள் வெளி­நா­டு­களால் உளவு பார்க்­கப்­பட்­டது மட்­டு­மல்­லாது, அந்த உரை­யா­டல்கள் தொடர்பில் மொனிக்காவும் தனது நம்­பிக்­கைக்­கு­ரி­ய­வர்­க­ளுக்கு தெரி­வித்­துள்ளார்.

பில்­கி­ளின்­ட­னுக்கும் தனக்குமிடையில் இடம்பெற்ற பாலியல் உரையாடல் தொடர்பில் மொனிக்கா தனது நண்பியொருவருக்கு விபரித்துள்ளார்.அத்துடன் பில் கிளின்டனுக்கும் வேறு பல பெண்களுக்கும் இடையில் இருந்த பாலியல் தொடர்புகள் குறித்தும் அந்தப் புத்தகத்தில் விபரிக்கப்பட்டுள்ளது

Check Also

ஹஜ் யாத்திரை நெரிசலில் சிக்கி 220 பேர் பலி; காயம் 450

சவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 220 பேர் பலியாகியதாக அஞ்சப்படுகிறது. மேலும் 450 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *