அரசியல்

பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை: காணொளி காட்சி மூலம் ஜெயலலிதா திறந்து வைத்தார்

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ரூ.143.14 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்–அமைச்சர் ஜெயலலிதா  இன்று திறந்து வைத்தார். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ரூ.143.14 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை இன்று முதல் அமைச்சர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் இருதய நோய், ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை, ரத்தகுழாய் அறுவை சிகிச்சை, …

மேலும் படிக்க

மானிய விலையிலான சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற ஆதார் அட்டை அவசியமில்லை: வீரப்ப மொய்லி

மானிய விலையிலான சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற ஆதார் அட்டை அவசியமில்லை என்று மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது பேசிய வீரப்ப மொய்லி; மானியம் இல்லாத எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுவதற்கு  ஆதார் அட்டை கணக்கு இணைப்பை நீக்குவது தொடர்பாக மத்திய அரசு ஒரு வாரத்தில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் என்று கூறியுள்ளார். மேலும், நேரடி மானிய திட்டத்தைப் பொறுத்தவரை மானியம் இல்லாத …

மேலும் படிக்க

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து ஆயுள்தண்டனையாக குறைத்தது. மேலும் இவர்களது விடுதலை குறித்து மாநிலஅரசு முடிவு செய்யலாம் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து இருந்தனர். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் …

மேலும் படிக்க

“அம்மா தியேட்டர்ஸ்”, “அம்மா வார சந்தை” – அம்மா உணவகத்தை அடுத்து வருகிறது,

சென்னை: அம்மா உணவகம், அம்மா குடிநீரை அடுத்து ஏழை மக்கள் குறைந்த விலையில் படம் பார்க்க அம்மா திரையரங்கம் அறிமுகப்படுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் நிதிக்குழு தலைவர் சந்தானம் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது மேயர் பல்வேறு புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். அம்மா தியேட்டர்ஸ் அம்மா திரையரங்கம், அம்மா வாரச்சந்தை, அம்மா தங்கும் விடுதி, அம்மா உண்டு, …

மேலும் படிக்க

ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி ராஜினாமா

ஆந்திர முதலமைச்சர் பதவியை கிரண்குமார் ரெட்டி ராஜினாமா செய்துள்ளார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள அவர், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக கிரண்குமார் ரெட்டி தெரிவித்துள்ளார். ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளார். தெலுங்கானாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் இந்த ராஜினாமா முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், முக்கிய முடிவுகள் எடுக்கும் போது அமைச்சரவை கவனமுடன் …

மேலும் படிக்க

சாந்தன்,முருகன், பேரறிவாளன், நளினி சிறையிலிருந்து விடுதலை : முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவிப்பு

சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தூக்கு தண்டனையிலிருந்து தப்பிய சாந்தன்,முருகன், பேரறிவாளன், நளினி ஆகியோரை விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று நடைபெற்ற தமிழகஅமைச்சரவை கூட்டத்தில் மூவரையும் விடுதலை செய்ய  முடிவு செய்யப்பட்டது. அமைச்சரவை முடிவு குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதனையடுத்து சாந்தன், முருகன், பேரறிவாளன் நளினி ஆகியோரை விடுவிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மாநில அரசுக்குள்ள …

மேலும் படிக்க

திமுகவின் பிரம்மாண்டமான 10வது மாநில மாநாடு – புகைப்படங்கள், திருச்சி

திருச்சி: திருச்சியில் திமுகவின் 10வது மாநில மாநாடு இன்று காலை தொடங்கியது. இம்மாநாட்டில் மாநிலம் முழுவதும் இருந்தும் பல லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் திரண்டுள்ளனர். திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பிராட்டியூர் அருகே தி.மு.க.வின் 10- வது மாநில மாநாடு இன்று காலை தொடங்கியது. சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ளது. அந்த திடல் லட்சக்கணக்கான தொண்டர்களால் நிரம்பி வழிகிறது. இம் மாநாடு நடைபெறும் …

மேலும் படிக்க

இடைக்கால ரெயில்வே பட்ஜெட் தாக்கல்,தமிழ்நாட்டுக்கு 9 புதிய ரெயில்கள் அறிவிப்பு

நாடாளுமன்றத்தில் இடைக்கால ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே தாக்கல் செய்தார். மக்களவையில் கடும் அமளிக்கிடையே இடைக்கால ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நடப்பு நாடாளுமன்றத்தில் கடைசி பட்ஜெட்டை மல்லிகார்ஜூன கார்கே தாக்கல் செய்வது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அவர் தேசிய ஒருமைப்பாட்டிற்கு ரயில்வேயின் பங்கு அளப்பரியதாகும் என்று குறிப்பிட்டார். 2758 கிலோ மீட்டர் தொலைவிற்கு இரட்டை பாதை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இலக்கைவிட …

மேலும் படிக்க

ராஜ் தாக்கரே, மகாராஷ்டிர அரசுக்கு சவால் ‘என்னை கைது செய்து பார்’:

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள முக்கிய சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்க கட்டண சோதனைச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதில் ஏராளமான முறைகேடுகள் நடந்து வருவதாக மகாராஷ்டிர நவ்நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கடந்த மாதம் குற்றம் சாட்டினார். இதனையடுத்து, கட்டணம் செலுத்த மறுத்து வரும் மகாராஷ்டிர நவ்நிர்மான் சேனா தொண்டர்கள் கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் உள்ள பல சோதனச் சாவடிகளை அடித்து, நொறுக்கி நாசம் செய்து வருகின்றனர். இது …

மேலும் படிக்க

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமா? உங்களுக்கும் ஒரு வாய்ப்பு

2014 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு அரசியல் சாக்கடையை சுத்தப்படுத்த ஆசையா? உங்களுக்கு தகுதி இருந்தால் வாய்ப்பளிக்க முன் வருகிறது, தில்லி சட்டமன்ற தேர்தலில் வரலாறு காணாத வெற்றி கண்ட ஆம் ஆத்மி கட்சி. நீங்கள் அவர்கள் இணையதளத்தில் (http://www.aamaadmiparty.org) உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பினால் போதும். தூய்மையான அரசியலை முன்னிறுத்தும் அவர்களோடு, தகுதியிருந்தால் நீங்களும் ஒருவராக போட்டியிடலாம். நமது நாட்டை மாற்றி அமைக்க எண்ணும் மக்கள் ஏன் மாற்றத்தை …

மேலும் படிக்க