ஆன்மீகம்

ரமலான் மாதத்தையொட்டி பள்ளிவாசல்களுக்கு 4,500 மெட்ரிக் டன் அரிசி வழங்க முதல்வர் உத்தரவு

ரமலான் மாதத்தையொட்டி பள்ளிவாசல்களுக்கு 4,500 மெட்ரிக் டன் அரிசி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்: சிறுபான்மை மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு, அவர்களுடைய நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில், இஸ்லாமிய மக்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்குவதற்கு தேவையான மொத்த அனுமதியை வழங்க …

மேலும் படிக்க

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை வைகாசி விசாக திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா நாளை புதன்கிழமை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகம் என்பது முருகப்பெருமான் அவதரித்த திருநாள். எனவே அன்றைய தினம் அவரை வழிபட்டால் வருடம் முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும். வைகாசி விசாக திருவிழா அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படும் என்றாலும், அறுபடை வீடுகளளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் வெகு விமரிசையாக இந்த விழா கொண்டாடப்படும். விழாவையொட்டி …

மேலும் படிக்க

நரேந்திர மோடி தனது மனைவி பெயரை அறிவித்ததன் பின்னணியில் காஞ்சி காமாட்சியம்மன்

பாஜக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனது மனைவி பெயரை அறிவித்ததன் பின்னணியில் காஞ்சி காமாட்சியம்மன் கோவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நரேந்திர மோடி தனது வேட்பு மனுவில் மனைவியின் பெயர் ஜசோதா பென் என்று குறிப்பிட்டார். இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் தனது மனைவியின் பெயரை மோடி அறிவிக்க காரணம் என்ன? என்று விசாரிக்கும் போது காஞ்சி காமாட்சியம்மன் உத்தரவினாலேயே மோடி தனது மனைவியின் பெயரை வெளிப்படுத்தியுள்ளார் என்றும் …

மேலும் படிக்க

ஸ்ரீரங்கம் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்:ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்தனர். வைணவத் திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்ட விழா கடந்த 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் பெருமாள் நாள்தோறும் பல்வேறு அலங்காரங்களில் வீதியுலாவுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். கடந்த 22-ஆம் தேதி நம்பெருமாள் கருட வாகனத்திலும், 23-ஆம் தேதி அனுமந்த வாகனத்திலும், 24-ஆம் தேதி யானை வாகனத்திலும், …

மேலும் படிக்க

திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசுவாமி கோயில் தங்கப்புதையல் திருடப்படுகிறதா?

கேரள மாநில திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலின் சொத்து மதிப்புகள் குறித்து விசாரணை செய்ய இந்திய உச்சநீதிமன்றம் நியமித்த முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமனியம் தலைமையிலான குழு தனது விசாரணையை முடித்து அந்த 577 பக்க அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளது. திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசுவாமி கோவிலில் உள்ள ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி மதிப்புள்ள தங்க நகைகள் உள்ளிட்ட பொக்கிஷங்கள் இருப்பது கடந்த 2011ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதை …

மேலும் படிக்க

சிங்காரத்தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழா

சிங்காரத்தோட்டம் டெக்ஸ்டைல்ஸ் & கார்மெண்ட்ஸ் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. 26-03-2014 அன்று நடைபெற்ற எழுத்துப் போட்டியில் 300 பேர் கலந்து கொண்டனர். அம்மன் திருவாசகத்தை 10 நிமிடத்துக்குள் எழுதிய முதல் மூன்று பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 27-03-2014 அன்று நூற்றுக்கும் மேற்பட்ட தாய்மார்கள் கலந்து கொண்ட கல்யாண சீர்வரிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலை ஒட்டிய வீதிகளில் அம்மன் சீர்வரிசையினை ஊர்வலமாக எடுத்துச் …

மேலும் படிக்க

ஸ்ரீமுத்துகுமாரசுவாமி திருக்கோயில்

கந்தக்கோட்டம் என அழைக்கப்படும் ஸ்ரீமுத்துகுமாரசுவாமி திருக்கோயிலின் பிரமோட்சவத்தின் ஒரு பகுதிதான் இராயபுரத்தில் நடைபெறும் ‘வேடர்பறித் திருவிழா’. அதாவது கந்தக்கோட்டத்தில் இருந்து புறப்படும் முருகப்பெருமான் வள்ளியை சிறைபிடித்து சென்று திருமணம் செய்வதற்காக இராயபுரத்தில் எழுந்தருளுவார். அந்த வகையில் நடைபெறும் இவ்விழாவில் இராயபுரம் ஸ்ரீமுருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடும்  வருகிற பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது. பல்லாண்டு காலமாக நடைபெறும் இம்மாபெரும் திருவிழாவில் இராயபுரம் பகுதியே விழாக்கோலம் பூண்டிருக்க சிறப்பான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி S. ஜீவா …

மேலும் படிக்க

கேளுங்கள் தரப்படும் – இயேசு

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்  இயேசு கேளுங்கள் கிடைக்கும் என்றார். மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் கிறிஸ்தவ பாடல். இந்த பாடல் வரிகள் மூலம் இயேசுவின் வரலாற்றை மிகவும் குறுகிய நேரத்தில் தெரிந்து கொள்ளலாம் என்பதே இப்பாடலின் சிறப்பு

மேலும் படிக்க