வெங்காயத்தை உரித்தால் தான் கண்களில் தண்ணீர் வரும். ஆனால், இப்போது வெங்காயத்தின் விலையைக் கேட்டாலே கண்ணீர் வரும் அளவுக்கு அதன் விலை விண்ணைத் தொட்டிருக்கிறது. என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது. 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ வெங்காயத்தின் விலை இப்போது 100 ரூபாயைத் தாண்டிவிட்டது. கடுமையான வறட்சி …
மேலும் படிக்கஇந்திய மக்கள் தொகையில் 79.8% இந்துக்கள்; 14.2% முஸ்லிம்கள்
இந்திய மக்கள் தொகை ஆணையம் வெளியிட்டுள்ள இந்த தகவலின்படி, இந்தியாவில் அதிகபட்சமாக இஸ்லாமியர்களின் மக்கள் தொகை 24.6 சதவீதமும் இந்துக்களின் மக்கள்தொகை 16.8 சதவீதமும் வளர்ச்சிகண்டுள்ளது. இந்தப் புள்ளிவிவரங்களின் படி இந்திய மக்கள் தொகையில் 79.8 சதவீதம் பேர் இந்துக்கள். 14.2 சதவீதம் பேர் முஸ்லிம்களாவர். இருந்தபோதும் இந்துக்களின் மக்கள்தொகை முந்தைய காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 0.7 சகவிகிதம் குறைந்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது. 2011ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை …
மேலும் படிக்கஇந்தியாவின் மக்கள் தொகை 121.09 கோடி
இந்தியாவின் மக்கள் தொகை 121.09 கோடி ஆகும். இதில் இந்துக்கள் 96.63 கோடி( 79.8 %), முஸ்லீம்கள் 17.22 கோடி ( 14.2 %), கிறித்தவர்கள் 2.3 கோடி (2.78 %), சீக்கியர்கள் 2.08 கோடி, ஜென மதத்தினர் – 45 லட்சம், பவுத்தவர்கள் – 84 லட்சம் ஆகும். இந்த புள்ளி விபரங்களை மத்திய அரசு அறிவித்து உள்ளது.
மேலும் படிக்கசுகாதாரத் துறை சார்பாக 22 நலத்திட்டங்கள், முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
தமிழக சுகாதாரத் துறை சார்பாக 22 நலத்திட்டங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாசித்த அறிக்கையில், “விசையுறும் பயதினைப் போல் – உள்ளம் வேண்டியபடி செலும் உடல் கேட்டேன்” என்று சொன்னதைச் செய்யும் உடல் வேண்டி உருகுகிறார் மகாகவி பாரதியார். நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தைப் பெற்றால் தான் அறிவுச் செல்வம் உட்பட அனைத்துச் செல்வங்களையும் …
மேலும் படிக்கஇளங்கோவனுக்கு நிபந்தனை முன்ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு
பெண் ஊழியரைத் தாக்கியது தொடர்பான வழக்கில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. இதுகுறித்த விவரம்: சென்னை, காமராஜர் அரங்கத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர் வளர்மதி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் நிர்வாக அதிகாரி ஜி.நாராயணன் ஆகியோர் தன்னைத் தாக்கியதாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், …
மேலும் படிக்கநேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம். தென் கிழக்கு நேபாளத்தைத் தாக்கியது
நேபாளத்தின் தென் கிழக்கில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட சேத விவரம் குறித்த விவரம் தெரியவில்லை. சில மாதங்களுக்கு முன்பு நேபாளத்தில் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் சீர்குலைந்தன. இந்த நிலையில் இன்று மிதமான நிலநடுக்கம் நேபாளத்தைத் தாக்கியது. கோடாரி எனும் இடத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளது.
மேலும் படிக்கசீனாவில் நடைபெற்று வரும் உலகத் தடகளப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் உசேன் போல்ட் மீண்டும் தங்கம் வென்றார்.
சீனாவின் பெய்ஜிங் நகரில் 15வது உலகத் தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 100 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்காவின் உசேன் போல்ட், அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லினுக்கிடையே கடும் போட்டி நிலவியது. எனினும் பந்தய தலைவை 9.79 வினாடிகளில் கடந்து உசேன் போல்ட் மீண்டும் சாம்பியன் ஆனார். இந்த போட்டியில் அமெரிக்க வீரர் ஜஸ்டின் காட்லீன் 9.80 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கத்தையும் ட்ரேவான் பிரம்மால்,ஆன்ட்ரே டி கிராஸ்சஸ் ஆகியோர் …
மேலும் படிக்கஇளங்கோவனுக்கு எதிரான போராட்டங்களை தொடர வேண்டாம்: ஜெயலலிதா
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிரான போராட்டங்களைத் தொடர வேண்டாம் என அதிமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், நாலாந்தர அரசியல்வாதிகளே பேசக் கூச்சப்படும் வார்த்தைகளை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதை கண்டித்தும், இதற்காக அவர் மன்னிப்புக் கேட்கக் கோரியும், அதிமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருவதை சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக மீனவர் பிரச்சனையில் பிரதமர் மோடிக்கு தாம் எழுதிய …
மேலும் படிக்கஇன்று சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர்பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு இன்று நடைபெறுகிறது. நாடெங்கிலும் ஒன்பதரை லட்சம் பேர் இந்த தேர்வினை எழுதுகின்றனர். 71 நகரங்களில் உள்ள, 2,000 தேர்வு மையங்களில் சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு நடைபெறுகிறது. கடந்த 2011ல், சிவில் சர்வீஸ் தேர்வில், ‘சிசாட்’ என்ற திறனறி தேர்வு நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது. இது, ஆங்கில வழி மாணவர்களுக்கு எளிதாகவும் மற்ற மொழி மாணவர்களுக்கு …
மேலும் படிக்கராமஜெயம் கொலை வழக்கு: இருவரிடம் உண்மை கண்டறியும் சோதனை
முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்புடையவர்களாக கருதப்படும் 2 பேரிடம், உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது. திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி, திருச்சி – கல்லணை சாலையில் உள்ள திருவளர்சோலை என்ற இடத்தில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை, கடந்த 2012 ஜூன் 27ம் தேதி, சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டது. ஆனால், …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி