அசத்தலான குடும்ப விழா..‌

சென்னை வீடியோ-புகைப்பட கலைஞர்கள் சங்கத்தின் 24 ஆம் ஆண்டு விழா மற்றும் குடும்ப விழா சென்னை, தண்டையார் பேட்டை, கேப்டன் மகாலில் 02.10.19 புதன்கிழமை காலை 11 மணியளவில் கோலாகலமாக துவங்கியது.

இவ் விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக திரு. D.S.R. சுபாஷ் (மாநில தலைவர், தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம்), PPFA மாநில தலைவர் ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr. லி.பரமேஸ்வரன், திரைப்பட நடிகரும், அறிமுக நாயகனுமான திரு. ரோஷன், தயாரிப்பாளர் & இயக்குநர் திரு.ஒ. ராஜாகனி, ஒளிப்பதிவாளர் திரு. ஹாலிக் பிரபு திரு. கானா சுதாகர் ஆகியோர் கலந்துக் கொண்டு, சங்கத்தின் உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு கல்வி ஊக்கத் தொகையும், நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்தும் கெளரவித்தனர்.

நிகழ்ச்சியில் PPFA நிறுவனர் திரு. P.V. ஜெயக்குமார், மாநில பொருளாளர் திரு. B. வெங்கடேசன், தலைமை நிலைய செயலாளர் திரு.ஜீனியஸ்” K. சங்கர், மாநில செயற்குழு உறுப்பினர்கள் திரு. V. கந்தவேல், திரு. B. செல்வம் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியினை பிரமிப்பான வகையில் சங்க நிர்வாகிகள் ஏற்பாடு செய்து, குடும்ப விழாவிற்கு குடும்பத்துடன் வருகை தந்தவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

இவ்விழாவில் சிறப்பு நிகழ்வாக “உற்றான்” திரைப்படத்தின் ட்ரைலர், பாடல் காட்சிகள் வெளியிடப்பட்டன.

ஒளிப்பதிவு:” ஜீனியஸ்” K. சங்கர்
படத்தொகுப்பு: அமுரா

Check Also

நெஞ்சம் நிறைந்த விழா!

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில அமைப்பு செயலாளர் திரு. Dr.Ln N. ரவி- திருமதி. சரஸ்வதி ரவி அவர்களது …