விஜய் நடிக்கும் கத்தி திரைப்படத்தின் விளம்பர பேனர் மற்றும் டீசர், விஜய் பிறந்த நாளான நேற்று வெளியிடப்பட்டது. இவை உலகின் பிரபல ஆங்கில பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ்ன் விளம்பரத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டவை என்று ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறியுள்ளது. இது தொடர்பாக அந்த செய்திதாள் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தினசரி வெளியாகும் செய்திதாள்களின் தொகுப்பில் விஜய் உருவம் வருவது போன்று விளம்பர பதாகை நேற்று வெளியிடப்பட்டது. அந்த பதாகை, தி வேட்ஸ் என்ற ஆங்கில படத்தின் விளம்பர பாதகையை போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது என்று சர்சை எழுந்துள்ளது.
இதே போல் நேற்று வெளியான டீசரும், காப்பி அடித்து வெளியிடப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னையில் ஜெமினி பிரிட்ஜ், எல்ஐசி பில்டிங், முக்கிய சாலைகளை செய்திதாள் வடிவில் காட்டியுள்ளனர், இது 2010-ல் அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ் – சபா நியூஸ் பேப்பர் டிவி, அமெரிக்கா முழுவதையும் செய்தித்தாள் பாணியில் வெளியிட்ட விளம்பரத்தை போன்று உள்ளது என்று சர்சை எழுந்துள்ளது.
நியுயார்க் டைம்ஸ் வீடியோ
கத்தி வீடியோ
3 day to kill என்ற ஹாலிவுட் படத்தின் போஸ்டரை போல் உள்ள கத்தி படத்தின் போஸ்டர்
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி
