நாளை முதல் புதிய ரயில் கட்டணம் அமல்.

மத்திய அரசு அறிவித்த புதிய ரயில் கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. நாளை அல்லது அதற்கு பிந்தைய தேதிகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகளுக்கும் இந்த கட்டண உயர்வு பொருந்தும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளியன்று பயணிகள் ரயில் கட்டணத்தை 14.2 சதவீதமும், சரக்கு கட்டணம் 6.5 சதவீதமும் அதிரடியாக உயர்த்தப்பட்டது.

இந்த புதிய கட்டண உயர்வு வரும் 25ம் தேதி ( நாளை ) முதல் அமலாகும் என ரயில்வே அமைச்சர் சதானந்தகவுடா அறிவித்திருந்தார். சாதாரண மக்களைப் இந்த கட்டண உயர்வு பாதிக்கும் எனக் கூறி, இந்த திடீர் கட்டண உயர்வை கண்டித்தும், அதை திரும்பப் பெறக் கோரியும், நாடு முழுவதிலும் கடும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தலைவர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அறிவிக்கப் பட்டபடி நாளை முதல் புதிய கட்டணம் வசூலிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பழைய கட்டணத்தில் முன்பதிவு செய்த பயணிகளிடன் மீதி கட்டணத்தை டிக்கெட் பரிசோதகர்கள் அல்லது முன்பதிவு அதிகாரிகள் வசூலிப்பார்கள் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதற்காக, சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், அரக்கோணம் போன்ற சில முக்கிய ரயில் நிலையங்களில்  சிறப்பு கவுண்டர்கள் இன்று முதல் திறக்கப்பட உள்ளது.

கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டபோதிலும் 25ஆம் தேதிக்கு முன்னர் சீசன் கட்டணத்தை புதுப்பித்தவர்களிடம், புதிய கட்டணம் வசூலிக்கப்படுமா? என்பது குறித்து எதுவும் தெளிவாக தெரியவில்லை

Check Also

இந்தி தொலைக்காட்சி விவாதத்தில் அடிதடி

இந்தி தொலைக்காட்சி ஒன்றில் நேற்றிரவு நடந்த விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஐபிஎன்7 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *