சினிமா பாணியில் திருடனை மடக்கிய போலீஸ்…

சென்னையில் நடந்து சென்றவரிடம் செல்போனை பறித்து பைக்கில் ஓட்டம் பிடித்த திருடனை, சினிமா பாணியில் தனது பைக்கில் விரைந்து சென்று மடக்கி பிடித்தார். மாதவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) திரு. ஆன்டிலின் ரமேஷ் அவர்கள்.

காவலர் உங்கள் நண்பன் என்ற வரிகளுக்கு ஏற்ப தற்போது காவல் துறையினர் திறம்பட செயல்பட்டு வரு கின்றனர். பிடிப்பட்ட செல்போன் திருடன் மூலம் அவனது மூன்று கூட்டாளிகளையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

செல்போன் திருடனை காவல் உதவி ஆய்வாளர் மடக்கிய காட்சிகளை மூன்றாவது கண்ணாக செயல்படும் சிசிடிவி மூலம் பார்த்த நமது சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் திரு. மகேஷ்குமார் அகர்வால் அவர்கள், காவல் உதவி ஆய்வாளர் திரு. ஆன்டிலின் ரமேஷ் அவர்கள் மடக்கிய காட்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, இவர் ஒர் “உண்மையான கதாநாயகன்” என பாராட்டியுள்ளதும், இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இது பற்றி நமது போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு.MJF Ln Dr லி.பரமேஸ்வரன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருடந்தோறும் தமிழக காவல்துறை திறமை வாய்ந்த காவலர்களையும், இவர்களுக்கு ஈடாக பெண் காவலர்களையும் தேர்வு செய்து மக்கள் நலனுக்காக தங்கள் அர்ப்பணிப்பினை வழங்கி வருவது மற்றும் துடிப்பான காவலர்கள் மூலம் அராஜகம் செய்து வருபவர்களை உடனுக்குடன் பிடித்து தண்டணை பெற்றுத் தருவது போன்ற செயல்களால் மக்களின் நம்பிக்கையினை பெற்று வரும் நமது காவல்துறையினருக்கு பாராட்டுக்கள். அந்த வகையில் சிறப்பாக பணியாற்றும் காவல்துறை நண்பர்களை வாழ்த்துவதில் பெருமையடைகின்றேன் “என தெரிவித்துள்ளார்.

செய்தியாக்கம்:
” கிங்மேக்கர்” Ln B. செல்வம்
சிறப்பாசிரியர், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி

Check Also

வெள்ள மீட்பு பணிகளில் மெத்தனமாக செயல்படும் சென்னை மாநகராட்சி….

சென்னை மாநகராட்சி மண்டலம் 2, 16 வது வார்டு பகுதியில் உள்ள குளக்கரை கிராமம் கடந்த நாட்களில் பெய்த கனமழை …