மூன்றாவது கண் திறப்பு மற்றும் கொரோனா விழிப்புணர்வு முகாம்…

சென்னை மணலி, மாத்தூர் எம்.எம்.டி.ஏ., 3 வது மெயின் தெரு, மசூதி அருகே, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மாவட்டம் சார்பில் CCTV திறப்பு மற்றும் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

PPFA திருவள்ளூர் மாவட்ட தலைவர் திரு.S. இதாயதுல்லா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட செயலாளர் திரு.A. செய்யது சுலைமான் முன்னிலை வகிக்க திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் பங்களிப்பில், சிறப்பு விருந்தினர்களாக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி.பரமேஸ்வரன், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில பொதுச் செயலாளர் திரு. Ln C.பாலகிருஷ்ணன் கலந்துக் கொண்டனர்

சென்னை பெருநகர காவல் மாதவரம் சரகம், உதவி ஆணையர் திரு. P.அருள் சந்தோஷ் முத்து அவர்களும், M2 மாதவரம் பால்பண்ணை காவல் நிலையம் ஆய்வாளர் திரு K. கிருஷ்ண மூர்த்தி அவர்களும் இணைந்து “மூன்றாவது கண்” CCTV ஐ பொதுமக்கள் நலனுக்காக திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் பேசிய உதவி ஆணையாளர் அவர்கள் கூறும் பொழுது, சமீபத்தில் தான் இந்த சரகத்தில் பதவி ஏற்றேன். எனது முதல் மக்கள் நல பொது நிகழ்வு இது தான். உங்களது இத்தகைய ஈடுபாட்டான உழைப்புக்கு எங்களால் ஆன உதவி குறிப்பாக மூன்றாவது கண் அமைப்பதற்கான முழு ஒத்துழைப்பினை செய்திட தயார் என தெரிவித்தார்.

தொடர்ந்து நம்மிடம் பேசியவர், ” எனது வீட்டு எதிரே உள்ள சலவை இயந்திர கடையில் இருந்து ரூ. 5000/ மதிப்புமிக்க அயர்ன் பாக்ஸ் திருடு போனது. அதை உடனடியாக கண்டுபிடித்து உரிமையாளரிடம் சேர்ப்பிக்க உதவியது ” மூன்றாவது கண்” CCTV தான் என கூறியது, இக் கருவி எந்த அளவுக்கு மக்களுக்காக காவல்துறையின் வேகத்திற்கு ஒத்துழைப்பு தருகின்றது என்பதை புரிந்துக் கொண்டோம்.

காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பேசுகையில், ” இன்னும் கொரோனா காலம் முடியவில்லை. அரசு வழிக்காட்டுதலின்படி முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியையும் தீவிரமாக கடைபிடித்தால் தான் இதிலிருந்து விடுபட முடியும். காவல்துறை விதிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்” என கேட்டுக் கொண்டார்.

நமது மாநில தலைவர் லி. பரமேஸ்வரன் அவர்கள் பேசுகையில், ” என்றும் மக்கள் நலன் சார்ந்த ஆக்கபூர்வமான பணிகளில் நமது காவல்துறையினருடன் இணைந்து செயல்படுவதில் பெருமைப்படுவதாகவும், நமது சங்கத்தினை தமிழகம் முழுவதும் விரிவடைய செய்ய அதற்கான செயல் திட்டங்களை தீட்டி வருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசுகையில், மக்கள் நலன் சார்ந்த குடிநீர் மற்றும் கழிவு நீர் பிரச்சினை, சாலை வசதி, மின் நுகர்வோர் என பல அடிப்படை பிரச்சினைகளை அந்தந்த பகுதி வாழ் மக்கள் தரும் புகார்களின் பேரில் சம்பந்தப்பட்ட துறையினரை நேரில் சந்தித்து தீர்த்திட நமது மாநில துணை செயலாளர் திரு. B. செல்வம் அவர்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்திருப்பதாக தெரிவித்தார்.

மாநில பொதுச் செயலாளர் ” செயல் சிங்கம்” திரு பாலகிருஷ்ணன் அவர்கள் பேசுகையில்” சுமார் 30 வருடங்கள் அரிமா சங்க பணியில் என்னை அர்ப்பணித்தாலும், நேரிடையாக மக்கள் நலன் திட்டங்களை செயல்படுத்திட வேண்டும். அவர்களையும் நேரில் சந்தித்து அதன் பயன் முழுமை பெற வேண்டும் என்பதற்காகவே இந்த சங்கத்தினை துவக்கியதாக பெருமிதத்துடன் கூறினார்.

இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது. நிகழ்வில், மாநில துணை செயலாளர் ” கிங்மேக்கர்” Ln B. செல்வம், மாநில இளைஞர் அணி தவைவர் திரு. Ln L.வேலாயுதம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாக்கம்:
வழிபோக்கன்
படங்கள்: திருவள்ளூர் PPFA குழு…

Check Also

தொடர் களப்பணியில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்…

சென்னையில் அண்மையில்  பெய்த பெரு மழையால் உணவின்றி தவித்த மக்களுக்கு போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் உணவு, உடை …