அருள்மிகு காளியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு பாலாயம்…

சென்னை, வண்ணையம்பதி, சிவஞானபுரம், ஆண்டியப்பன் தெரு, 1 ஆவது சந்து 4 ஆம் எண்ணில் உள்ள பழம் பெரும் ஆலயமாய், மக்களை காத்தருளும் பக்தி தருகின்ற சக்தியாய் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு காளியம்மன் ஆலய கும்பாபிஷேகம் நடத்திடுவதன் முதற்கட்டமாக 10.12.2020 வியாழக்கிழமை காலை 8 மணியளவில், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

தொடர்ந்து கோமாதா பூஜைகள் நடந்தன. இதன் பிறகு கணபதி ஹோமம் வளர்க்கப்பட்டு ஆலயத்தில் ஆகமவிதிப்படி பாலாயம் செய்விக்கப்பட்டது.
இந்த பக்திமயமான நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் வருகை
தந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

சிறப்பு பூஜைகளில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில பொதுச் செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி கெளரவ ஆசிரியருமான ” செயல் சிங்கம்” திரு. Ln C. பாலகிருஷ்ணன் அவர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்.

பாலாயம் நிகழ்வினை ஆலய திருப்பணிக்குழுவினர் சிறப்பான வகையில் நடத்தியதும், சர்வம் சக்திமயமாய் விளங்கி வரும் காளியம்மன் ஆலயம் நிர்வாகிகள், பக்தர்கள் முழுமையான பங்களிப்பில் பொலிவுடன் நிர்மாணம் செய்ய இருப்பதாகவும், வருகின்ற 2021ல் பிறக்க போகும் “பிலவ” தமிழ் மாதத்தில் கும்பாபிஷேகத்தினை கோலாகலமாக நடத்திட திட்டமிட்டு இருப்பதாகவும், இவ்வாலய திருப்பணிக்கு பொருளுதவி செய்திடும் பக்தர்கள் குறிப்பாக ரூ. 10,000 க்கு மேல் தருபவர்களது பெயரினை கல்வெட்டில் பொறிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இவ் வகையில் வருகை தந்த “செயல் சிங்கம்” திரு. Ln C. பாலகிருஷ்ணன் அவர்கள் தன் பங்களிப்பாக ரூ. 10,000 தருவதாக கூறியுள்ளார். நிகழ்வில் கலந்துக் கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

செய்தியாக்கம்:
“கிங்மேக்கர்” திரு. Ln B.செல்வம்
ஒளிப்பதிவு: “ஜீனியஸ்” K.சங்கர்

Check Also

பிஜேபி சார்பில் நலத்திட்ட உதவிகள்…

மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பாரதத்தின் பிரதமராக பதவியேற்று முழுமையாக ஏழு ஆண்டுகள் கடந்து எட்டாம் …