Tag Archives: பக்தி

சென்னை இராயபுரம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் அன்னாபிஷேகம்…

சென்னை இராயபுரம், கல்மண்டபம், அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் அமைந்துள்ள, காசி விஸ்வநாத சிவபெருமானுக்கு வெகு விமரிசையாக அன்னாபிஷேகம் நடைபெற்றது. ஆலய குருக்கள் திரு. ராஜசேகர், திரு. மகேஷ் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற அன்னாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர், தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஐப்பசி மாதத்தில் வரும் பெளர்ணமி நாளில் நடைபெறுகின்ற அன்னாபிஷேகத்தை கண்டுகளித்து அந்த உணவினை பக்தியுடன் உண்போருக்கு வாழ்நாள் முழுவதும் உணவு பஞ்சம் ஏற்படாது என்பது ஐதீகம். …

மேலும் படிக்க

பழைய வண்ணாரப்பேட்டை காளியம்மன் திருக்கோயில் நவராத்திரி விழா…

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, ஆண்டியப்பன் முதல் தெருவில் எழுந்தருளியுள்ள 96 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அருள்மிகு காளியம்மன் திருக்கோயில் நவராத்திரி விழா மிகச்சிறப்பாக கொன்டாடப்பட்டது. காளியம்மன் என்றாலே உக்கிரமான தெய்வம் என சொல்வதுண்டு. ஆனால், இங்கே வீற்றிருக்கும் இந்த அம்மனை உக்கிரமாக பார்த்தால் உக்கிரமானவளாகவும், சாந்தமாக பார்த்தால் சாந்த சொரூபியாகவும் காட்சிதருவது சிறப்பம்சமாகும். இத்தகைய பெருமை வாய்ந்த திருக்கோயிலில் 8 ஆம் ஆண்டு நவராத்திரி திருவிழா 07.10.2021 வியாழக்கிழமை அன்று …

மேலும் படிக்க

அருள்மிகு காளியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு பாலாயம்…

சென்னை, வண்ணையம்பதி, சிவஞானபுரம், ஆண்டியப்பன் தெரு, 1 ஆவது சந்து 4 ஆம் எண்ணில் உள்ள பழம் பெரும் ஆலயமாய், மக்களை காத்தருளும் பக்தி தருகின்ற சக்தியாய் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு காளியம்மன் ஆலய கும்பாபிஷேகம் நடத்திடுவதன் முதற்கட்டமாக 10.12.2020 வியாழக்கிழமை காலை 8 மணியளவில், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து கோமாதா பூஜைகள் நடந்தன. இதன் பிறகு கணபதி ஹோமம் வளர்க்கப்பட்டு ஆலயத்தில் ஆகமவிதிப்படி பாலாயம் செய்விக்கப்பட்டது.இந்த பக்திமயமான …

மேலும் படிக்க

சென்னை, திருவொற்றியூர், திலகர் நகர் வைகுண்ட பெருமாள் 3 ஆம் ஆண்டு திருவுருவபட வழிபாடு!

சென்னை, திருவொற்றியூர் காலடிபேட்டை, திலகர் நகர் அருள்மிகு வைகுண்ட பெருமாள் 3 ஆம் ஆண்டு திருவுருவப்படத்தை வைத்து வழிபாடு செய்யும் விழா சிறப்பாக நடைபெற்றது. இவ் விழாவினையொட்டி, 03.10.2020 சனிக்கிழமை மாலை 7 மணியளவில் பெருமாளுக்கு புஷ்ப அலங்காரமும், தீப ஆராதனையும் அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக போலீஸ் ப்பளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் …

மேலும் படிக்க

இராயபுரம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் பிரம்மோற்சவ விழா!

இராயபுரம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் பிரம்மோற்சவ விழா 21.02.2020 முதல் 05.03.2020 வரை நடைபெற்றது. இவ்விழாவினையொட்டி மயானக் கொள்ளையும் மற்றும் அதனை தொடர்ந்து அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சுவாமிக்கு பத்து நாட்கள் திருவிழா நடைபெற்றது‌. 11 ம் திருவிழாவாக (03.03.2020) செவ்வாய்க்கிழமையன்று வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும், திருக்கல்யாண வைபவமும், திருவீதி உலாவும் சிறப்பாக நடைபெற்றது. ஒளிப்பதிவு: வே. கந்தவேல்செய்தியாக்கம்: ” …

மேலும் படிக்க

அருள்மிகு காளியம்மன் ஆலயத்தில் மகா சிவராத்திரி…

நூற்றாண்டை நோக்கி நடைபோடும் தன் ஆலயத்தினை நாடி வரும் பக்தர்களுக்கு தன் சக்தியால் நல்வாழ்வினை தந்து கொண்டிருக்கும் வண்ணையம்பதி, சிவஞானபுரம், ஆண்டியப்ப முதலி 1 வது சந்தில் வீற்றிருக்கும் அருள்மிகு காளியம்மன் திருக்கோயிலில் மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இத் திருக்கோயிலின் சிறப்பு நிகழ்வாக “பத்ரகாளியம்மன் அருள்மகள்” திருமதி கலையரசி அவர்கள், தன்னை நாடி வருகின்ற பக்த கோடிகளின் குறைகளை தீர்த்து வைத்திடும் வகையில் ” அருள் …

மேலும் படிக்க

நமக்கு தெரிந்த கோவில்கள் நமக்கே தெரியாத அதிசயங்கள்!

1. சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள். காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும்; மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும். 2. மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு …

மேலும் படிக்க

திருப்பதி திருக்குடை ஊர்வலம் செப்.25-இல் சென்னையில் தொடக்கம்

இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் வரும் 25-ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இதுகுறித்து இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி விடுத்துள்ள அறிக்கை: கடந்தாண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டுத் திருக்குடைகள் சென்னையிலிருந்து எடுத்துச் சென்று சமர்ப்பணம் செய்யப்படவுள்ளன. வரும் 25-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு …

மேலும் படிக்க

நாளை புரட்டாசி முதல் சனிக்கிழமை: நவதிருப்பதி கோயில்களில் சிறப்பு வழிபாடு

நவதிருப்பதி என்பது இந்தியாவில், தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையோரம் அமைந்துள்ள 9 முக்கிய இந்து வைணவதலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புப் பெயராகும். இந்த ஒன்பது தலங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நவக்கிரகத்துக்கு உரியவையாக விளங்குகின்றன. இவை திவ்ய தேசங்களாகவும் உள்ளன. நவக்கிரகங்கள் பொதுவாக இந்து சைவ வழிபாட்டுத்தலங்களில் முக்கிய பங்கு வகிப்பன. நவதிருப்பதி என அழைக்கப்படும் ஒன்பது வைணவ தலங்களும், நவக்கிரகங்களுடன் தொடர்புடையவையாகக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமா‌ளே நவக்கிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. சோழநாட்டில் அமைந்துள்ள நவக்கிரகங்களுக்கு ஒப்பாக இப்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் நவக்கிரகங்களாகப் போற்றப்படுகின்றன. …

மேலும் படிக்க

இராயபுரம் அருள்மிகு ஸ்ரீ சஞ்சிவிராயன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

இராயபுரம் அருள்மிகு ஸ்ரீ சஞ்சிவிராயன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம். நாள்: 31-08-2014

மேலும் படிக்க