பழைய வண்ணாரப்பேட்டை காளியம்மன் திருக்கோயில் நவராத்திரி விழா…

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, ஆண்டியப்பன் முதல் தெருவில் எழுந்தருளியுள்ள 96 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அருள்மிகு காளியம்மன் திருக்கோயில் நவராத்திரி விழா மிகச்சிறப்பாக கொன்டாடப்பட்டது.

காளியம்மன் என்றாலே உக்கிரமான தெய்வம் என சொல்வதுண்டு. ஆனால், இங்கே வீற்றிருக்கும் இந்த அம்மனை உக்கிரமாக பார்த்தால் உக்கிரமானவளாகவும், சாந்தமாக பார்த்தால் சாந்த சொரூபியாகவும் காட்சிதருவது சிறப்பம்சமாகும்.
இத்தகைய பெருமை வாய்ந்த திருக்கோயிலில் 8 ஆம் ஆண்டு நவராத்திரி திருவிழா 07.10.2021 வியாழக்கிழமை அன்று கோலாகலமாக தொடங்கியது.

ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காளியம்மன் காட்சி தந்து பரவப்படுத்தினாள்‌. இந்த விழாவினையொட்டி அம்மனின் பக்தர்கள் கடுமையான விரதத்தினை கடைபிடித்து அக்னிசட்டியினை ஏந்தியபடி ஊர்வலமாய் வந்தனர்( ஆண்டியப்பன் தெருவில் உள்ள விநாயகர் கோயிலிலிருந்து தீச்சட்டி ஏந்திய பக்தர்கள் எம்.சி. சாலையில் உள்ள துலக்கானத்தம்மன் திருக்கோயில், காமாட்சி அம்மன் திருக்கோயில், சிங்காரத் தோட்டத்தில் உள்ள சின்ன சேனியம்மன் திருக்கோயில், குமாரசாமி தெருவில் உள்ள வீரபத்ர காளி அம்மன், ஆதம் தெருவில் உள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில், சோமு தெருவில் உள்ள முத்துமாரியம்மன் திருக்கோயில் என தீச்சட்டியுடன் தரிசித்து இறுதியில் காளியம்மன் திருக்கோயிலை வந்தடைந்தனர்)

ஒவ்வொரு நாளும் இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை பக்தர்கள் சிறப்பு பக்தி பாடல்களை பாடி அம்மனை வழிபட்டனர். சிறப்பு நிகழ்வாக அக்னி சட்டி ஏந்தியன்று 21 அசைவகும்பம் அம்மனுக்கு படைத்து வழிப்பட்டது குறிப்பிடத்தக்கது.

17.10.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அம்மன் அன்னபூரணி அலங்காரத்தில் காட்சி தர, மதியம் 12 மணியளவில், 1001 பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் ஆலய நிர்வாகிகள் சார்பில் வழங்கப்பட்டது.

ஒளிப்பதிவு, செய்தியாக்கம்:
“கிங்மேக்கர்” Ln B.செல்வம்

Check Also

பிபிஎஃப்ஏ (PPFA) திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் “தண்ணீர் பந்தல் திறப்பு” மாவட்டத்தின் தலைவர் திரு. ச.பாக்கியராஜ் …