09.04.2020 வியாழக்கிழமை, மதியம் 12.30 மணியிலிருந்து…
கொரோனா வைரஸ் பாதிப்பால், ஊரடங்கினால் பசியால் தவித்து வருகின்ற சாலையோர மக்களின் பசியினை போக்கிடும் வண்ணம் தினசரி அவர்களுக்கான மதிய உணவினை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு.MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்கள் மற்றும் இராயபுரம் முனைவர் சு. சேகர் ஆகியோரது தலைமையில், இராயபுரம் காசிமேடு, A.J.காலனி சுற்று வட்டாரத்தில் நேரடியாக சென்று உணவளித்தனர்.
இவர்களுடன் மாநில இணை செயலாளர் திரு. Ln A.G அசோக்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் திரு. MJF Ln Dr M. நாகராஜன் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. A.M. ரஷீத், வடசென்னை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் திரு. G. பாலாஜி, ஆகியோர் உடன் இருந்து களப்பணி. செய்தனர்.
இணைந்த கைகள்
திரு. Ln தேவேந்திரன்: ரூ. 3000/-
திரு. முனைவர் இராயபுரம் சு. சேகர்: ரூ. 1000/-
இது போன்று தொடர்ந்து பங்களிப்பினை அளித்து வரும் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும், களப்பணியில் இணைந்து செயலாற்றி வருகின்றவர்களுக்கும் PPFA சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
செய்தியாக்கம்: “ஜீனியஸ்” K. சங்கர்
ஒளிப்பதிவு G. பாலாஜி
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி