கார் பான் (Cor Pan) என்ற நெதர்லாந்தைச் சேர்ந்த இளைஞர் தனது மொபைலில் பிடித்த எம்.ஹெச்.17 விமானத்தின் புகைப்படத்தை இணைத்து, அதில் “ஒருவேளை இது மாயமானால், விமானம் இப்படித்தான் இருந்தது என்பதை அறிவீர்” எனும் பொருள்தரும் பதிவை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்திருந்தார்.
ஆனால், ஆம்ஸ்டர்டாமில் இருந்து புறப்பட்ட அந்த விமானம், கிழக்கு உக்ரைனில் ஏவுகணைத் தாக்குதலில் நொறுங்கி விழுந்தது. அதில், பயணித்த 298 பேரும் உயிரிழந்தனர். அதில், தனது காதலியுடன் கார் பானும் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது.
கார் பானின் ஃபேஸ்புக் பதிவை, ‘தி கார்டியன்’ பத்திரிகை செய்தியாக வெளியிட்டுள்ளது.
கார் பான் பதிவேற்றம் செய்த எம்.ஹெச்.17 விமானத்தின் புகைப்படம், இதுவரை 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரால் பகிரப்பட்டுள்ளது. அந்தப் பதிவில், அவரது நண்பர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலையும், அவருடனான நட்பைப் பற்றிய நினைவுகளையும் பகிர்ந்துள்ளனர்.