சில நாட்களுக்கு முன்பு ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய தெலுங்கானா தெலுங்கானாவை மதிக்க வேண்டும். தெலுங்கானாவை தொடர்ந்து அவமதித்தால் பத்து அடி ஆழத்திற்கு குழி தோண்டி புதைத்து விடுவோம் எனக் கூறியுள்ளார் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட் மாநிலத் தலைவர் மற்றும் பத்திரிக்கையாளர் குரல் ஆசிரியருமான DSR சுபாஷ் அவர்கள் சந்திரசேகரராவ் ‘’குழி தோண்டுவது’’ தன்னுடைய ஆட்சியை புதைக்கத்தான்..! என கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஒன்றுபட்ட ஆந்திராவின் சொத்துக்களைப் பிரிப்பதில் குழப்பம் விளைவித்து வரும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் பத்திரிகையாளர்களை மிரட்டும் விதமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆந்திராவிலிருந்து ஒளிபரப்பாகி வரும் இரண்டு செய்தி சேனல்களை தெலுங்கானா கேபிள் டிவி சங்கம் முடக்கியது. காரணம் அவைகளில் ஆந்திராவிற்கு ஆதரவாகவும், தெலுங்க்கானாவிற்கு எதிராகவும் செய்திகள் வந்ததாக சொல்லப்பட்டு வருகிறது. இதனால் பத்திரிகையாளர்கள் அதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்பாட்டம் நடத்தினர்.
கண்டன தெரிவித்த பத்திரிகையாளர்கள் அனைவரையும் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து ஒரு விழாவில் பேசிய முதல்வர் ” இரண்டு செய்தி சேனல்களின் ஒளிபரப்பை முடக்கிய கேபிள் டிவி ஆபரேட்டர்களை பாராட்டுகிறேன். இனியும் அந்த சேனல்கள் தங்களின் அணுகுமுறைகளை மாற்றிக்கொள்ளாவிட்டால், அவர்களுக்கு பாடம் கற்பிப்பேன்.
தெலுங்கானாவை மதிக்க வேண்டும். தெலுங்கானாவை தொடர்ந்து அவமதித்தால் பத்து அடி ஆழத்திற்கு குழி தோண்டி புதைத்து விடுவோம் என்று அநாகரீகமாகப் பேசியுள்ளார்.
இன்று பிரதமராக உயர்ந்திருக்கும் நரேந்திர மோடிக்கு, உறுதுணையாக இருந்தது இந்த ஊடகங்கள்தான் என்பதை உணராமல், ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கி வரும் பத்திரிகைத் துறையினரை மிரட்டுவது. அவருக்கும், அவருடைய ஆட்சிக்கும் பாதகமாக அமையும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது.
அவர் தோண்டும் குழி தனக்குத்தானே தோண்டிக்கொள்ளும் சவக்குழிக்கு நிகரானது என்பதில் சந்தேகமே இல்லை. என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.