ரஷ்யா மீதான புதிய பொருளாதார தடைகள் குறித்த அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகுமென ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.
பெல்ஜியம் தலைநகர் ப்ரசல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா எடுத்து வரும் நடவடிக்கைகளை பொறுத்து புதிய பொருளாதார தடைகள் அமையும் என ஐரோப்பிய யூனியன் தலைவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லையெனில், மேற்கத்திய நாடுகளுடனான அதன் உறவு பெரிய அளவில் பாதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.