பாகிஸ்தானில் பயங்கர கலவரம் – பிரதமர் அலுவலகம், அரசு டிவி அலுவலகம் சூறை

பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலகுமாறு  முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியும், மத குரு தார் உல் காதிரியின் பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் கட்சியும் இப்போது கூட்டணி அமைத்து, போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இம்ரான் கானும், தார் உல் காதிரியும், பிரதமர் நவாஸ் ஷெரீப் வீட்டின் முன்பாக கூடி தர்ணாவில் ஈடுபடும்படி தங்கள் கட்சி தொண்டர்களுக்கு உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து முன்னேறிய போராட்டகாரர்களூக்கும் போலீச்சருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது இதில் 8 பேர் பலியானார்கள். 500க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

இந்நிலையில், நவாஸ் ஷெரீப் வீட்டை நெருங்கி தாங்கள் முற்றுகையிட்டுள்ளதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

அத்துடன் பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான பி டிவி அலுவலகத்துக்குள் நுழைந்த கிளர்ச்சியாளர்கள் அதை சூறையாடினர். இதனால் பி டிவி தனது ஒளிபரப்பை நிறுத்தி வைத்துள்ளது.

Check Also

ஹஜ் யாத்திரை நெரிசலில் சிக்கி 220 பேர் பலி; காயம் 450

சவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 220 பேர் பலியாகியதாக அஞ்சப்படுகிறது. மேலும் 450 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *