ஓபன் சோர்ஸ் பிரவுசர் (Browser) நிறுவனமான பயர் ஃபாக்ஸ் இன்டெக்ஸ் அண்ட் ஸ்பைஸ் எனும் செல்போன் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து ஸ்மார்ட் போன் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது.
அதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மொபைல் வேர்ல்டு காங்கிரஸில் வெறும் 25 டாலர் (1500 ரூபாய்) மதிப்பிலான பயர் ஃபாக்ஸ் ஓ.எஸ் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. தற்போது வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா மற்றும் சீனாவில் இந்த செல்போனை விற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது பயர் ஃபாக்ஸ்.
இந்த பயர் ஃபாக்ஸ் ஓ.எஸ் செல்போன் ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் ஓ.எஸ்-கள் இயங்கும் படி இதன் மென்பொருள் கட்டமைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளது.இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் அதிக அளவு ஸ்மார்ட்போன் விற்பனையாகியுள்ளதை தொடர்ந்து பயர் ஃபாக்ஸ் இந்திய மார்க்கெட்டை பயன்படுத்து கொள்ளும் எண்ணத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.