ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் 10-ம் ஆண்டு துவக்க விழா மற்றும் ஜீனியஸ் விருது வழங்கும் விழா

பிரமிப்பு… சிலிர்ப்பு… சிறப்பு…
நமது ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் 10 ம் ஆண்டு துவக்க விழா 24.08.19 சனிக்கிழமை மதியம் 3 மணியளவில் துவங்கியது . அரங்கத்தில் மக்கள் இசையை ரசித்துக் கொண்டிருந்தபோது, சிறப்பு விருந்தினராக வசந்தம் வீசிய புயலாக திரு. H. வசந்தகுமார் M.P., அவர்கள் அரங்கினுள் நுழைந்திட ஆரவாரமாக ஆரம்பமாகியது ஜீனியஸ் ரிப்போர்ட்டரின் 10 ஆம் ஆண்டு விழா…

திரு. Dr. A. கோவிந்தன் அவர்களின் ” நினைவலைகள்” புத்தகம் வெளியிடப்பட்டு விழா துவக்கி வைக்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக நம் அழைப்பினை ஏற்று வருகைத் தந்த மாண்புமிகு. நீதியரசர் திரு. P. ஜோதிமணி, மாண்புமிகு நீதியரசர் திரு. T.N. வள்ளிநாயகம் மற்றும் திரு. Dr. G.மணிலால், திரு.Dr.R. ராஜகோபால், திரு.Dr.S. சந்திரசேகர், திரு.‌Dr. J.B. விமல், திரு. Dr.A. கோவிந்தன், திரு. Prof.Dr. K. சொக்கலிங்கம், திரு. மதியழகன், திரு. D. புருஷோத்தமன் ஆகியோர் கலந்துக் கொண்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனையாளர்களுக்கு, கல்வி, சமூகம், தொழிலதிபர், ஆன்மீகம், பத்திரிகையாளர், எழுத்தாளர், நல்லாசிரியர் மற்றும் சிறப்பு ஜீனியஸ் ஷேபா விருதுகளை வழங்கி கெளரவித்தனர்.

நிகழ்வில் முத்தாய்ப்பாக 10 ம் ஆண்டினை ஒட்டி நமது இதழின் ஆசிரியர் ” அமைதி புயல்” திரு. B. வெங்கடேசன், முதன்மை ஆசிரியர் “நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன், ” செயல் சிங்கம்” திரு. Ln.C. பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களால் சிறப்பிக்கப்பட்டனர்.

சிறப்பு நிகழ்வாக நமது முதன்மை ஆசிரியர் நட்பின் மகுடம் திரு MJF Ln லி. பரமேஸ்வரன் அவர்கள் குடும்ப நண்பர் திருமதி. சிவகாமி அவர்கள் உடல் உறுப்பு தானம் செய்வதற்கான விண்ணப்பத்தினை சிறப்பு விருந்தினர்களிடம் வழங்க, அவரையும் கெளரவித்தது கூடுதல் சிறப்பாகும்.

நிகழ்ச்சியின் தொகுப்பினை சிறப்பான வர்ணனையில் திரு. B. கார்த்திகேயன், திரு. Ln .A. செல்வம் ஆகியோர் வழங்க, இந்த விழா சீறும் சிறப்புடன் நடைபெற்றது.

இந்த விழா சீறும் சிறப்புமாக நடைபெற இரவு பகலாக ஒத்துழைத்த ஜீனியஸ் டீம், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் அனைவருக்கும் இதயங்கனிந்த நன்றியினை சமர்ப்பிப்பதில் பூரிப்படைகின்றோம்…

Check Also

வெள்ள மீட்பு பணிகளில் மெத்தனமாக செயல்படும் சென்னை மாநகராட்சி….

சென்னை மாநகராட்சி மண்டலம் 2, 16 வது வார்டு பகுதியில் உள்ள குளக்கரை கிராமம் கடந்த நாட்களில் பெய்த கனமழை …