நைஜீரியப் படைகள் நடத்தியத் தாக்குதலில் போகோ ஹராம் தலைவர் என்று கருதக்கூடிய முகமது பஷீர் கொல்லப்பட்டதாக நைஜீரிய ராணுவம் அறிவித்துள்ளது.
நைஜீரிய அரசுக்கு கடந்த ஐந்து ஆண்டு காலமாக அச்சுறுத்தலாக இருந்த போகோ ஹராம் அமைப்பின் தலைவர், நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தின் கொடுங்கா எனும் இடத்தில், புதன்கிழமை இரவு போகோ ஹராம் தீவிரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், அந்த இயக்கத்தின் தலைவரான முகமது பஷீர் கொல்லப்பட்டதாக பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அந்த இயக்கத்தின் தலைவர் முகமது பஷீர் கொல்லப்பட்டதை அடுத்து அந்த இயகத்தின் முக்கிய தலைவர்களாக செயல்பட்டு வந்தவர்கள் உட்பட 260-க்கும் மேற்பட்டோர் சரணடைந்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி