மங்கள்யான் வெற்றி : தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் இன்று வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை உலகம் முழுவதில் இருந்தும் பலர் பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செயதியில் கூறியிருப்பதாவது:

நமது விஞ்ஞானிகள் மங்கள்யான் விண்கலத்தை இன்று(24,09,2014) செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளனர். இது இந்தியா மற்றும் இஸ்ரோவின் (ISRO) வரலாற்று சிறப்பு மிக்க சாதனையாகும். இந்த சாதனையை நிகழ்த்திய அனைத்து விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும்  தொழில்நுட்ப குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சாதனை, இளைஞர்களை ஆராய்ச்சி ஈடுபட தூண்டுகோலாக இருக்கும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Check Also

முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் தமிழகத்திற்கு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு: முதலமைச்சர் ஜெயலலிதா

உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழகத்திற்கு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ஒரு லட்சம் …

Leave a Reply

Your email address will not be published.