
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் ( PPFA), இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ், லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் சங்கம் (INRBDMA) இணைந்து கோடை வெப்பத்தில் தவிக்கும் பகுதி வாழ் மக்களின் தாகத்தை தீர்க்கும் வண்ணம், 2 ஆம் ஆண்டு “நீர் மோர் பந்தல் திறப்பு விழா” தண்டையார் பேட்டை, துர்காதேவி நகர் 1வது தெருவில், திரு. எஸ். எழில்சம்பத் அவர்களது தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்ட PPFA மாநில தலைவர் “நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன், திரு. விருகை Dr V.N. கண்ணன், அகில இந்திய தலைவர், INRBDMA, திரு. பா.ஜெய்ஹரி ( மா.தலைவர்) ஆகியோர் இணைந்து நீர்,மோர் வழங்கி சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில், PPFA தலைமை நிலைய செயலாளர் திரு. கே. சங்கர், PPFA முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி திரு. B.லட்சுமி நாராயணன், PPFA மாநில மகளிர் அணி அமைப்பு செயலாளர் திருமதி. சித்ரா ஆனந்தன், வடசென்னை மாவடடம்(கி) செயலாளர் திரு. அ. மான்சன், INRBDMA வை சேர்ந்த திரு. சந்தானம், திரு. கே. மணிவண்ணன், திரு. எஸ். ரெங்கசாமி, திரு. சேலைவயல் சரவணன், திரு. ஏ. பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.



Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி