இந்தியர்கள் யாரும் ஈராக் செல்ல வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்
இராக்கில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதால் அந்நாட்டுக்கு செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும். அங்கு வசித்து வரும் இந்தியர்கள் நாடு திரும்புவது குறித்து உரிய முடிவெடுக்க வேண்டும்’ என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஈராக்கில் பாதுகாப்பாற்ற சூழ்நிலை நிலவுகிறது. இந்த அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்திய மக்கள் அந்நாட்டுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும், தற்போது அங்கு வசித்துவரும் இந்தியர்கள் அவசியம் ஏற்பட்டால் நாடு திரும்புவது குறித்து முடிவெடுக்க வேண்டும்.
வன்முறை பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம். இந்தியத் தூதரக அலுவலகத்துடன் அவர்கள் தொடர்பில் இருப்பது நல்லது.
ஏதேனும் உதவி தேவைப்பட்டால் பாக்தாத் நகரில் இந்தியத் தூதரகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 24 மணிநேர அவசர சேவை மையத்தை அணுகலாம். நாடு திரும்புவதற்கான முறையான ஆவணங்கள் இல்லாதவர்கள் இது குறித்து தூதரகத்தை அணுகி, வேண்டிய உதவியைப் பெறலாம்.
Tel. No. +964 770 444 4899, +964 770 444 4899 (Mobile)
Tel No. +964 770 484 3247, +964 770 484 3247 (Mobile)
Email: amb.baghdad@mea.gov.in
Website: www.indianembassybaghdad.in