ஃபார்முலா 1 நட்சத்திரம் ஷூமேக்கர் கோமாவிலிருந்து மீண்டார்

ஃபார்முலா 1 கார்பந்தயத்தின் நட்சத்திர வீரர் மைக்கேல் ஷூமேக்கர் கோமாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார்.

இந்தத் தகவலை அவரது குடும்பத்தினர் இன்று வெளியிட்டனர். மேலும் அவரது ஆரோக்கியம் சீரடைய மறுவாழ்வு சிகிச்சையும் அவருக்கு அளிக்கப்படவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தென் கிழக்கு பிரான்சில், அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றார். அவரது குடும்பத்தினர் ஷூமாக்கருக்காக பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு, அவருக்கு இரவும் பகலும் அயராது சிகிச்சை அளித்து மீட்ட மருத்துவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

ஷூமேக்கர் 2012-ல் கார் பந்தயத்தில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு சாகச விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி வந்த ஷூமாக்கர், பிரான்ஸின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்தபோது பாறையில் மோதி விபத்துக்குள்ளானார்.

தலையில் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் விரைவில் பூரண குணமடைய உலகம் முழுவதும் உள்ள அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த வேளையில், அவர் மீண்டிருப்பது குறித்த செய்தி அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இணையதளவாசிகள் தங்களது மகிழ்ச்சியை ட்விட்டர், ஃபேஸ்புக் மூலம் பகிர்ந்தவண்ணம் உள்ளனர்.

Check Also

ஹஜ் யாத்திரை நெரிசலில் சிக்கி 220 பேர் பலி; காயம் 450

சவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 220 பேர் பலியாகியதாக அஞ்சப்படுகிறது. மேலும் 450 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *