ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு பிற்பகல் 1 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.
இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பெங்களூரு சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா, அங்கிருந்து பரப்பன அக்ரஹார வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜரானார்.
ஜெயலலிதாவுடன், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனும் உடன் சென்றனர்.
பரப்பன அக்ரஹார வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் இன்னும் சற்று நேரத்தில் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி