தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காலியாக இருந்த 530 பதவியிடங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் கடந்த 18-ஆம் தேதி நடந்தது.
இந்த தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. உள்பட கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், அ.தி.மு.க., பா.ஜ.க., கம்யூனிஸ்டு கட்சிகள் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 1,486 பேர் போட்டியிட்டனர்.
உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குப்பதிவு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளன.
இந்நிலையில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.