உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: கோவை, தூத்துக்குடி மேயர் தேர்தலில் அதிமுக வெற்றி

உள்ளாட்சி இடைத்தேர்தலில் கோவை, தூத்துக்குடி மேயர் பதவிக்கான தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மேயர் பதவிக்கான இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் அந்தோணி கிரேஸி 1,16,593 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். பாஜக வேட்பாளார் 31,708 வாக்குகள் பெற்றார். பிற கட்சிகள் 1305 வாக்குகள் பெற்றுள்ளன.

கோவை

கோவையில், அதிமுக வேட்பாளர் கணபதி 1,13,180 வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார். பாஜக வேட்பாளர் 37,585 வாக்குகளும், கம்யூனிஸ்ட் வேட்பாளர் 9288 வாக்குகளும் பெற்றனர்.

தூத்துக்குடி, கோவை மேயர்கள் உட்பட 530 பதவிகளுக்கு கடந்த 18-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலை திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன. இதனால், அதிமுக பாஜக இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டது. சில இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சியினரும் போட்டியிட்டனர்.

உள்ளாட்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

தூத்துக்குடி, கோவை மாநகராட்சிகளுக்கான மேயர் பதவிக்கான இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளனர். கோவை மேயர் பதவி தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் கணபதி வெற்றி பெற்றுள்ளார்.

நகராட்சித் தேர்தல் முடிவுகள்:

அரக்கோணம் நகராட்சித் தேர்தலில், அதிமுக வேட்பாளர் கண்ணதாசன் வெற்றி பெற்றுள்ளார்.

பரமக்குடி நகராட்சி 20-வது வார்டு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

திற்பரப்பு பேரூராட்சி 4-வது வார்டுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

கடலூர் நகர் மன்றத் தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஆர்.குமரன் வெற்றி பெற்றார்.

சென்னை, மதுரை, திருச்சி, திருப்பூரில் அதிமுக வெற்றி:

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 35வது வார்டு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் டேவிட் ஞானசேகரன் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் டேவிட் ஞானசேகரன் 19,676 வாக்குகளும், பாஜக வேட்பாளர் 1,522 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

மதுரை மாநகராட்சி, 4-வது வார்டு இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சண்முகம் 4,900 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

திருச்சி மாநகராட்சி, 15-வது மற்றும் 32-வது வார்டுகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 15-வது வார்டில் அதிமுக வேட்பாளர் ராஜலட்சுமியும், 32-வது வார்டில் அதிமுக வேட்பாளர் சங்கரும் வெற்றி பெற்றுள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சி, 22-வது வார்டில் அதிமுக வேட்பாளர் கலைமகள் கோபால்சாமி, 45-வது வார்டில் அதிமுக வேட்பாளர் எம்.கண்ணப்பன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

Check Also

சுறு சுறு ஓட்டு சேகரிப்பில் திமுக தொண்டர்கள்…

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில், திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், கழக தலைவர் தளபதி திரு. மு.கஸ்டாலின் அவர்களின் ஆசி பெற்ற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *