எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் இன்று வெளியிட்டார். தரவரிசைப் பட்டியலை www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேருவதற்கு 27907 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான தரவரிசைப் பட்டியலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டார்.
முதலிடம் சுந்தரமகேஷ் தரவரிசைப் பட்டியலில் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்த 132 பேரில், மாணவர் சுந்தரமகேஷ் முதலிடம் பிடித்துள்ளார். தரவரிசைப் பட்டியலில் 2 ஆம் இடத்தை அபிஷேக், 3 ஆம் இடத்தை விஜயராம் பிடித்துள்ளனர். 18ல் கவுன்சிலிங் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர வரும் 17 ஆம் தேதி சிறப்பு பிரிவினருக்கான கலாந்தாய்வு நடைபெறுகிறது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 18 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.