யுக்ரைன் மீது பறந்து கொண்டிருந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான வாய்ப்பு அதிகம் என்பதைத்தான் ஹாலாந்து விசாரணை அறிக்கை காட்டுவதாக மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் கூறியுள்ளார்.
விமானம் விழுந்த இடத்தில் உள்ள எஞ்சிய உடல் பாகங்களை கண்டெடுக்க அந்தப் பகுதிக்கு சென்று கொண்டிருக்கும் மலேசியக் குழுவுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்றும் ரசாக் கேட்டுள்ளார். விமானம் ஏன் கிழே விழ்ந்தது என்பதையும் இந்தக் குழு ஆராயும்.
எம் எச் 17 விமானத்தில் பயணித்த 298 பேரும் கொல்லப்பட்டனர். மிக வேகமாக பயணிக்கும் அதிக எண்ணிக்கையிலான பொருட்களால் தாக்கப்பட்டதால் விமானம் உடைந்து விழுந்ததாக ஹாலாந்து பாதுகாப்பு அமைப்பு கண்டறிந்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவோ, விமானியின் தவறு காரணமாகவோ இந்த விமானம் விழவில்லை என்று கூறப்பட்டுள்ளது.