போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் பொதுக்குழு கூட்டம்…

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் பொதுக்குழு கூட்டம் 27.09.2020 ஞாயிறு காலை 11 மணியளவில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது.

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் கெளரவ ஆசிரியருமான “செயல் சிங்கம்” Ln C. பாலகிருஷ்ணன் அவர்கள் முன்னிலை வகித்து, வரவேற்புரையாற்றினார்.

அவரது உரையில் PPFA சங்கம் கடந்து வந்த பாதையின் செயல்பாடுகளையும், வளர்ச்சி பணிகளை செயல்படுத்தும் விதத்தினையும் எடுத்துரைத்தார்‌.

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்கள் தலைமையேற்று பேசுகையில் நமது சங்கம் மற்றவர்களை போல் அல்லாது நிர்வாகிகள், உறுப்பினர்களாகிய உங்களது மேன்மையான ஒத்துழைப்பில் வீறு நடை போடுவதாகவும், அதுவும் அதிகமான இளைஞர்களை கொண்டது நமது சங்கம். மேலும் அவர்களது பங்களிப்புதான், எங்களது காலத்துக்கு பிறகும் ச‌ங்க‌ம் வெகு காலம் நிலைத்திட வழி வகுத்திடும் என குறிப்பிட்டார்.

தொடர்ந்து, மாற்றியமைக்கப்பட்ட புதிய பொறுப்பில் உள்ளவர்களை அறிமுகப்படுத்தினார். அந்த வகையில் திரு. G. மோகன் B.A., அவர்கள் மாநில துணை தலைவராகவும், “ஆன்மீகம்” I. நாகராஜன் மாநில துணை அமைப்புச் செயலாளராகவும், திரு. I. கேசவன் மாநில துணை செயலாளராகவும், “கிங் மேக்கர்” திரு.Ln B. செல்வம் M.A., மாநில துணைசெயலாளராகவும், திரு MJF Ln N. சரவணன் மாநில இணை பொதுச் செயலாளராகவும், திரு.Ln P. ஹரிகிருஷ்ணன் மாநில ஒருங்கிணைப்பாளராகவும், திரு S.M.பாஷா, மாநில செயற்குழு உறுப்பினராகவும், திரு. J. வாசுதாசன் மாநில இளைஞர் அணி துணை செயலாளராகவும், திரு. R. சத்திய நாராயணன் மாநில இளைஞர் அணி துணை செயலாளராகவும் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

திரு. ” மெட்ரோமேன்” S. அன்பு, மாநில கண்காணிப்பு குழு தலைவராகவும், திரு. P.K மோகனசுந்தரம் M.Com., மாநில கண்காணிப்பு குழு செயலாளராகவும், திரு‌. P. நாகலிங்கம், சென்னை மாவட்ட தலைவராகவும், திரு. S. அன்பு, சென்னை மாவட்ட செயலாளராகவும், திரு. S. சேகர், தென் சென்னை மாவட்ட தலைவராகவும், திரு. B. தர்மலிங்கம், தென் சென்னை மாவட்ட இணை செயலாளராகவும், திரு. P. பாலாஜி, தென் சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும், திரு. T. செந்தில்குமார், தென் சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும், திரு. M. வெங்கட், வட சென்னை மாவட்ட தலைவராகவும் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

மகளிர் அணியில், திருமதி K. லாவண்யா, மாநில மகளிர் அணி தலைவியாகவும், திருமதி A.சித்ரா, மாநில மகளிர் அணி செயலாளராகவும், திருமதி மோகனா செல்வம் B.A., மாநில மகளிர் அணி இணை செயலாளராகவும், திருமதி மீனா பாபு, சென்னை மாவட்ட மகளிர் அணி தலைவியாகவும் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

புதிய நிகழ்வாக நமது சங்கத்தின் மாநில தலைவரது புதல்வி செல்வி. பூர்ணிமா பரமேஸ்வரன் B.Com., MBA., மாநில செயல் தலைவியாகவும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ் & ஜீனியஸ் டீவி முதன்மை நிர்வாக ஆசிரியராக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாத இறுதியிலிருந்து ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மதிய உணவினை நமது போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் நேரிடையாக களத்தில் வழங்கப்பட்டது.

இதற்கான முதல் முயற்சியாக திரு. MJF Ln M.நாகராஜ் அவர்கள், மாநில தலைவருடன் தன்னை அர்ப்பணித்து களத்தில் இறங்கினார். தொடர்ந்து மதிய உணவு திட்டத்திற்காக தங்களால் இயன்ற பொருளுதவி செய்த வகையில், “செயல் சிங்கம்” திரு. Ln C.பாலகிருஷ்ணன், திரு MJF Ln N. சரவணன், திரு.சத்திய நாராயணன், திரு. பிரகாஷ், திரு. பாலாஜி, திரு.P. நாகலிங்கம், திரு. விஸ்வநாதன், திரு T.B. முரளி, திரு A.M.ரஷித், திரு. Ln. தேவேந்திரன், ” கிங்மேக்கர்” திரு. Ln B. செல்வம், திரு D. மகேந்திரன், திரு. Ln V.K. இராமசந்திரன் திரு. கமலேஷ்வர், திரு. Ln V. N. விஜயராகவன், திரு. S. அன்பு ( Ch. Port Trust) திரு. பிரசாந்த், திரு விக்டர் ஜோகிந்திரா, “பூங்கா நகர்” திரு. ராஜன், “பூங்கா நகர்” திரு. விஜயன் ஆகியோருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்த மட்டில் நமது மாநில தலைவரின் வழிக்காட்டுதலின்படி ஊரடங்கின் போது மக்கள் நலனுக்காக செயல்படுத்தபட்ட பணிகளுக்காக களப்பணி செய்தவர்களான திரு. S. இதயாதுல்லா, திரு A. செய்யது சுலைமான், திரு A. ஜமீல் அஹமது, திரு. S. நூருல் அமீன், ” ஆட்டோ” திரு நூருல் அமீன், திரு. K.R. ரமேஷ், திரு. K.முஸ்தபா, திரு. V சேகர், திரு.Ds. சுரேஷ், திரு.Gs. சத்தியநாராயணன் ஆகியோருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.

தென் சென்னை மாவட்ட களப்பணியில், திரு. வாசுதாசன் அவர்கள் தலைமையில் இயங்கிய திரு.B. தர்மலிங்கம், திரு.S. மணிகண்டன், திரு.P. மகாலிங்கம், திரு.R. தவக்குமார், , திரு.S. ஆறுமுகம் திரு.V. வீரப்பன், “அடையார்” திரு. M ஆறுமுகம், திரு.S. சம்பத், திரு. M ஷரி ஆகியிருக்கும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.

கொருக்குப்பேட்டை பகுதியில் களப்பணியினை திரு.K. மகேஷ்குமார் தலைமையில் செயல்படுத்திய திரு. J. செல்லப்பன், திரு. S. கோட்டீஸ்வரன், திரு. A. வேலு, திரு T. லட்சுமிபதி, திரு. D. தியாகு, திரு.K. விக்னேஷ், திரு.C. கிருஷ்ணகுமார் ஆகியோருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலை வர்ணையாக திரு. N.B. சுந்தரம் (மக்கள் தொடர்பு அதிகாரி) சிறப்பாக தொகுத்து வழங்க, நன்றியுறையினை திருமதி மோகனா செல்வம் வழங்கிட, வருகை தந்த அனைவருக்கும் அறுசுவை விருந்தினை தந்து உபசரித்த மாநில தலைவர் அவர்களது அன்பில் மன நிறைவோடு விழா நிறைவடைந்தது.

– ஒளிப்பதிவு & படங்கள்: திரு. G.பாலாஜி, திரு.V. கந்தவேல்
– செய்தியாக்கம்:
“ஜீனியஸ்” K. சங்கர்

Check Also

PPFA திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பாக முப்பெரும் விழா!…

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்(PPFA) திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில், 31.10.2021, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் முப்பெரும் விழா …