டிசம்பர் 31 என்றாலே நமது போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்கள் தனது பிறந்த நாள்தான் நினைவுக்கு வரும்.
அந்த வகையில் இந்த வருட பிறந்தநாள் விழா, PPFA சங்க ஆண்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மக்களை பயமுறுத்தி வரும் கோரோனா நோய் தாக்கத்தினால் எளிமையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி 31.12.2020 அன்று PPFA நிர்வாக அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இன்று காலை 11 மணியளவில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில பொதுச் செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் கெளரவ ஆசிரியருமான ” செயல் சிங்கம்” திரு. C. பால கிருஷ்ணன் தலைமையில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில இளைஞர் அணி தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் துணை ஆசிரியருமான திரு. Ln L. வேலாயுதம் முன்னிலையில், மாநில செயல் தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் உதவி நிர்வாக ஆசிரியருமான திரு. T.J. ஆனந்தன், மாநில துணை செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் சிறப்பாசிரியருமான “கிங்மேக்கர்” திரு. Ln B.செல்வம், மாநில துணை செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் உதவி நிர்வாக ஆசிரியருமான திரு. I. கேசவன், மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. A.M ரஷீத், சென்னை மாவட்ட தலைவர் திரு. S அன்பு ( Ch.Port Trust), மத்திய சென்னை மாவட்ட தலைவர் திரு. ” பூங்கா” C. ராஜன், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் திரு. S.விஜயன், தென் சென்னை மாவட்ட தலைவர் திரு.S.சேகர், தென் சென்னை மாவட்ட துணை தலைவர் திரு. B.தர்மலிங்கம், வட சென்னை மாவட்ட தலைவர் திரு.M.வெங்கட், வட சென்னை மாவட்ட செயலாளர் திரு. D.மகேந்திரன், வட சென்னை மாவட்ட( கி) தலைவர் திரு. A.மதன், செயலாளர் திரு A. மான்சன், திருவள்ளூர் மாவட்ட தலைவர் திரு. S.இதயாதுல்லா, மாவட்ட செயலாளர் திரு A.செய்யது சுலைமான் மற்றும் நமது மாநில, மாவட்ட, இளைஞர், மகளிர் அணியினர் கலந்துக் கொண்ட விழா மிகவும் சிறப்பான வகையில் கொண்டாடப்பட்டது.தன் தாயின் மீது என்றும் மாறாத பாசத்தினை கொண்ட தலைவர், மகளிர் அணி நிர்வாகிகள் கரங்களால் தான் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்கிற உறுதியில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில மகளிர் அணி செயல் தலைவி செல்வி பூர்ணிமா பரமேஸ்வரன், மாநில மகளிர் அணி செயலாளர் திருமதி சித்ரா ஆனந்தன், மாநில மகளிரணி இணை செயலாளர் திருமதி செல்வ மோகனா, தலைவரது துணைவியார் திருமதி. சுகந்தி, சென்னை மாவட்ட மகளிர் அணி தலைவி திருமதி மீனா ஆகியோரது கரங்களால் மகளிருக்கான சேலைகள் மற்றும் உணவு வழங்கி ஒர் உத்வேகமான கொண்டாட்டமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
எளிய முறையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநில, மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள், அரிமா நிர்வாகிகள் மற்றும் நண்பர்கள் நேரில் பங்கேற்று தலைவருக்கு பொன்னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
செய்தியாக்கம்,ஒளிப்பதிவு, படங்கள்:
“ஜீனியஸ்” K. சங்கர்
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி