தகுதி இல்லாத இவர்களை அரசியலில் வளர விடலாமா…

ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும்? ஒவ்வொரு தலைவர்களும் எவ்வாறெல்லாம் மக்களின் நன்மதிப்பினை பெற்று வாழ்ந்தனர்.

ஆனால் இன்று இருக்கும் இவரைப் போல தராதரம் தெரியாதவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் மக்கள் எவ்வளவு கஷ்டங்களை அனுபவிப்பார்கள் என நினைத்தால் மனம் கனக்கிறது.

நான்காம் துணாக மக்களின் அவலங்களை பிரதிபலிக்கின்ற பத்திரிகைகள், ஊடகங்கள் எத்தகைய பணி சூழலில் அல்லும், பகலும் சுழன்று வருகின்றனர். இதையெல்லாம் அடிப்படை அறிவே இல்லாமல் ஒரு கட்சி தலைவரின் (தனது கணவரை மழுங்கடித்து விட்டு “மங்காத்தா” ஆட்டம் ஆடுகின்ற ராணியாய்) மனைவியாக வலம் வருகின்ற இவருக்கு அரசியல் வாடையே தெரியாது. இவரது கட்சி தலைவர் வாய் பேச முடியாத நிலையிலே அரசியல் வித்தைகள் தெரிந்த தலைவியாய் தன்னை அங்காரத்துடன் பாவித்துக் கொண்டு பத்திரிகை, ஊடக நண்பர்களை மரியாதையே இல்லாமல் ( நீ…வா.. போ என்கிற ரீதியிலா பேசுவார்) இவரது பேட்டியை பார்த்த போது நான்காம் தூணை செல்லரிக்க இவரை போன்ற புல்லுரிவிகள் கிளம்பியதை எண்ணி மனம் வேதனைப்படுகிறது.

நமக்கும் சூடு, சோரணை வேண்டுமல்லவா..?
அரசியல் தராதரம் தெரியாத குடும்பத்தின் (மகனும், தம்பியும் விதிவிலக்கல்ல) கட்சியாய் வலம் வரும் இவரை போன்றவர்களுக்கு இந்த தேர்தல் மூலம் பத்திரிகை, ஊடக நண்பர்கள் கண்டிப்பாக பாடம் புகுத்தினால் தான் நாம் தலை நிமிர முடியும்.

செய்திடுவோமா…
” நட்பின் மகுடம்”
திரு..MJF Ln Dr.லி பரமேஸ்வரன்
மாநில அமைப்புச் செயலாளர், தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம்

Check Also

சுறு சுறு ஓட்டு சேகரிப்பில் திமுக தொண்டர்கள்…

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில், திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், கழக தலைவர் தளபதி திரு. மு.கஸ்டாலின் அவர்களின் ஆசி பெற்ற …


Notice: Undefined variable: visibility_homepage in /home/kmaafxvc/geniustv.in/wp-content/plugins/kn-mobile-sharebar/kn_mobile_sharebar.php on line 71