கல்மண்டபம் அங்காளபரமேஸ்வரி திருக்கோயில் பிரம்மோற்சவம் ஆரம்பம்…

11-03-2021 மஹாசிவராத்திரியினை முன்னிட்டு, இராயபுரம், கல்மண்டபம், ஆதம் தெருவில் எழுந்தருளியுள்ள அங்காளம்மன் திருக்கோயிலின் பிரம்மோற்சவம் விழா கோலாகலமாக தொடங்கியது.

இதனையொட்டி இரவு முழுவதும் நான்கு கால பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.
12.03.2021 வெள்ளிக்கிழமை பகல் 12 மணியளவில், மயான கொள்ளை நடைபெற்றது. இராயபுரம் மேம்பாலம் அருகில் நடைபெற்ற மயான கொள்ளையினை முடித்த அம்மன், இராயபுரத்தின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு ஆனந்த காட்சியினை தந்து அருள் பாலித்த வண்ணம் தனது திருக்கோயிலினை மாலை 6 மணியளவில் சென்றடைந்தாள்.


மீண்டும் கொரோனா பரவல் ஆரம்ப நிலையிலும் அதனையெல்லாம் மறந்து “அம்மா நீயே துணை. உன் அருளால் அந்த தீய சக்தியினை ஒழித்திடு” என்று வேண்டி, வீதியெங்கும் பக்தர்கள் நிறைந்து அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிப்பட்ட விதம் பக்தி பரவசமானது.

செய்தியாக்கம்:
“கிங்மேக்கர்” Ln B.செல்வம்
ஒளிப்பதிவு: “ஜீனியஸ்” K. சங்கர்

Check Also

239 ஆண்டு பழைமை வாய்ந்த முதியோர் இல்லத்தில் பிறந்தநாள் விழா…

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில துணை பொதுச்செயலாளரும், அரிமா சங்கத்தின் வட்டார தலைவருமான திரு. MJF Ln N.சரவணன் …