பாரதிய ஜனதா கட்சி சார்பில் “வெற்றிக் கொடி ஏந்தி” இரு சக்கர வாகன பேரணி…

பாரதீய ஜனதா கட்சியின் ராயபுரம் சட்டமன்ற தொகுதி சார்பாக “வெற்றி கொடி ஏந்தி” எனும் இரு சக்கர வாகன பேரணி 10.03.2021 புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் மூலக்கொத்தலத்தில் உள்ள “பெரிய பாளையம் அம்மன்” ஆலயத்தில் துவங்கி நடைபெற்றது.

பேரணிக்கு திரு.S. வன்னியராஜன், இராயபுரம் சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் தலைமையில், திரு. P.S.பாஸ்கர்,திரு D. சந்துரு, திரு V.சரவணன் முன்னிலை வகிக்க, இரு சக்கர வாகன பேரணியினை, திரு M.கிருஷ்ணகுமார், வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.

சிறப்பு அழைப்பாளராக திரு.N.L. நாகராஜன், இராயபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கலந்துக் கொண்ட பேரணியானது வள்ளலார் நகர், பார்த்தசாரதி மேம்பாலம் வழியாக டி.எச். ரோடு சென்ற எழுச்சிமிகு பேரணியில் பாரதீய ஜனதா கட்சியின் தொண்டர்கள் சுமார் 300 இரு சக்கர வாகனத்தில் கட்சி கொடியினை ஏந்தி ஆரவாரத்துடன் பழைய வண்ணை சுழல் மெத்தை அருகில் பேரணியினை முடித்தனர்.

இந்நிகழ்வில் , இராயபுரம் மண்டல தலைவர்கள் திரு S.ரூப்சந்தர், திரு. V.ஏழுமலை, திரு. K.பழனி மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.


ஒளிப்பதிவு, செய்தியாக்கம்:
“கிங்மேக்கர்” Ln B. செல்வம்

Check Also

நகைச்சுவை நடிகர் இராயபுரம் விஜயம்…

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, ஆண்டியப்பன் முதல் தெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் 48 ஆம் நாள் மண்டல …