ராஜிவ்காந்தி கொலை வழக்கில் மூன்று தமிழர் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க சென்னை உயர்நீதிமன்றத்திலும் டெல்லி உச்சநீதிமன்றத்திலும் வாதாடியவர் ராம் ஜெத்மலானி. மூன்று தமிழரின் தூக்கு ரத்தானபோது ஜெத்மலானிக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கி நன்றி தெரிவித்தார். இந்நிலையில் ஜெத்மலானி இன்று சென்னை வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெத்மலானி, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்யக்கூடாது என்று நினைக்கிற முட்டாள்கள்தான் இருக்கின்றனர். ராஜிவ் காந்தி வழக்கில் குற்றவாளிகள் என கருதப்பட்டவர்கள் போதுமான தண்டனைக் காலத்தை அனுபவித்துவிட்டனர். இந்த வழக்கில் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த முடிவும் மேற்கொண்ட அணுகுமுறையும் சரியானதே. உச்சநீதிமன்றம் 7 தமிழர் விடுதலைக்கு இடைக்கால தடை விதித்திருக்கிறது. இதனால் அவர்கள் விடுதலையில் தாமதமாகலாமே தவிர அவர்கள் விடுதலையாவதில் எந்த ஒரு சிக்கலுமே இல்லை என்றார்.