ஐஸ்வர்யா ராய் குடும்ப பிரச்சனை – மாமியார் மருமகள் சண்டை

அனில் அம்பானி கொடுத்த பார்ட்டியில் ஐஸ்வர்யா ராய் தனது மாமியார் ஜெயா பச்சன் இருக்கும் பக்கமே செல்லவில்லையாம். அனில் அம்பானி தனது தாய் கோகிலாபென் அம்பானியின் 80வது பிறந்தநாளையொட்டி மும்பையில் உள்ள தனது வீட்டில் பார்ட்டி கொடுத்தார். அந்த பார்ட்டிக்கு தொழில் அதிபர்கள், திரை உலக பிரபலங்கள் என ஏராளமானோர் வந்திருந்தனர். அனில் அம்பானியின் சகோதரர் முகேஷன் அம்பானி தனது குடும்பத்துடன் பார்ட்டிக்கு வந்திருந்தார்.

அம்பானி வீட்டு பார்ட்டி என்றால் பச்சன்கள் இல்லாமல் இருக்காது. அனில் அம்பானி கொடுத்த பார்ட்டிக்கு ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோர் வந்திருந்தனர்.

பார்ட்டி முழுவதும் ஐஸ்வர்யா ராய் மாமியார் ஜெயா பச்சன் இருக்கும் பக்கமே போகாமல் இருந்துள்ளார். அவர் பொது இடத்தில் மாமியாரை தவிர்த்ததை பலரும் கவனித்துவிட்டனர். ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது மாமியாருக்கும் இடையே ஒத்துப் போகவில்லை என்று அண்மையில் செய்திகள் வெளியாகின. ஜெயா ஐஸ்வர்யாவின் அனைத்து விஷயங்களிலும் தலையிடுவது அவருக்கு பிடிக்கவில்லையாம்.

திருமணம் ஆனதில் இருந்து ஐஸ்வர்யா தனது மாமனார் அமிதாப் பச்சன், மாமியார் ஜெயா பச்சனுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்கிறார். இந்நிலையில் மாமியாரின் செயல்கள் பிடிக்காததால் அவர் கணவர் மற்றும் மகள் ஆராத்யாவுடன் தனிக்குடித்தனம் செல்வார் என்று செய்திகள் வெளியாகின. இத்தனை நாட்களாக நான்கு சுவருக்கு உள்ளே நடந்த மாமியார், மருமகள் பிரச்சனை தற்போது பொது நிகழ்ச்சி ஒன்றில் அனைவர் முன்பும் நடந்துள்ளது.

வீட்டுக்கு வீடு வாசப்படி….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *