ராயபுரம் போக்குவரத்து காவல் சார்பில், ஞாயிற்றுகிழமை தளர்வில்லா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண‌வு…

ஞாயிற்றுகிழமைகளில் தளர்வில்லா ஊரடங்கினால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு ராயபுரம் சரகத்தில் ராயபுரம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் அமுல்தாஸ் மற்றும் போக்குவரத்து புலனாய்வு துறை உதவி ஆய்வாளர் சுந்தரம், ராயபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கோதண்டம் ஆகியோர் பொதுமக்களுக்கு அறுசுவை உணவு, தண்ணீர் பாட்டில்கள் மற்றும் முககவசம் வழங்கினர்.

இதில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர் சிவா உடன் இருந்தனர். இதில் விசாகபதி, தருண்ராஜ், சூர்யா, தங்கராஜ், ராஜ்குமார் ஆகியோரும் சமூக பணியில் ஈடுபட்டனர்.

Check Also

சென்னை மாநகர காவல்துறை சார்பில் பசியால் வாடிய மக்களுக்கு உண‌வு வழங்கப் பட்டது….

சென்னை, புயல் சீற்றத்தால் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பால், உணவின்றி தவித்த மக்களுக்கு சென்னை பெருநகர காவல்துறை …