சென்னை, புயல் சீற்றத்தால் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பால், உணவின்றி தவித்த மக்களுக்கு சென்னை பெருநகர காவல்துறை சார்பில் மதிய உணவு வழங்கப் பட்டது.
சென்னை தண்டையார்ப்பேட்டை, சேனியம்மன் கோவில் அருகே துணை ஆணையர் திரு. சிவபிரசாத் அவர்கள் தனது காவல்துறை குழுவுடன் இணைந்து நேரிடையாக மக்களுக்கு மதிய உணவினை வழங்கினார்.
மக்களை பாதுகாப்பது மட்டுமல்லாமல், அவர்களது பசிப்பிணியினையும் இது போன்ற தருணங்களில் போக்க முடியும் என்பதை செயலில் காட்டி வரும் காவல்துறைக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
ஒளிப்பதிவு: B. கார்த்திகேயன்
செய்தியாக்கம்: “ஜீனியஸ்” K. சங்கர்
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி