பிரிட்டனிலிருந்து ஸ்காட்லாந்து சுதந்திரம் பெற்று தனி நாடாக பிரிவதற்கான பொது வாக்கெடுப்பு இன்று நடைபெற்று வருகிறது.
இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றை இணைத்து 1707-ல் பிரிட்டன் நாடு அமைக்கப்பட்டது. அதிலிருந்து கடந்த 1922ல் அயர்லாந்து பிரிந்து, தனி நாடானது.
அதேபோன்று, ஸ்காட்லாந்தையும் தனி நாடாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுந்து வந்தது. இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வாக்கெடுப்பு நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து பொது வாக்கெடுப்பு தொடர்பாக ஆதராகவும், எதிராகவும் பிரசாரங்கள் செய்யப்பட்டு வந்தன.
இந்நிலையில், இந்திய நேரப்படி, இன்று காலை 10.30 மணிக்கு வாக்கெடுப்பு தொடங்கியது இரவு 10 மணி வரை நடைபெறும் வாக்கெடுப்பில் சுமார் 42 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.
பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டு அதிகாரப்பூர்வ முடிவு நாளை காலை வெளியாகும். ஸ்காட்லாந்து தனியாக பிரியுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்