ஆபாசப் படம் பார்க்க வைத்ததாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் நித்யானந்தா

கடந்த 2012-ம் ஆண்டு நித்யானந்தாவின் சீடர் ஆர்த்தி ராவ் அவர் மீது பாலியல் பலாத்கார புகார் அளித்தார். எனவே அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 8-ஆம் தேதி நித்யானந்தாவுக்கு பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சுமார் 6 மணி நேரம் ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது. இதற்கு நித்யானந்தா சரியாக‌ ஒத்துழைக்கவில்லை. ஆதலால் ஆண்மை பரிசோதனை முழுமையாக நடத்தவில்லை. நீதிமன்றத்தை நாடி, மீண்டும் ஆண்மை பரிசோதனை நடத்த உத்தரவிடக் கோருவோம் என கர்நாடக சிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை மேற்கொண்ட விக்டோரியா மருத்துவமனையின் தலைமை மருத்துவர் துர்கண்ணா நித்யானந்தாவின் பரிசோதனை முடிவுகளை கர்நாடக சிஐடி போலீசாரிடம் நேற்று சமர்ப்பித்தார்.

இந்நிலையில், நித்யானந்தா நான் ஒரு தெய்வப்பிறவி. ஆறு வயது சிறுவனுக்குரிய உடல் வளர்ச்சியிலே இருக்கிறேன். ஆண்மை பரிசோதனையின் போது உடைகளை களையச் சொல்லி கட்டாயப்படுத்தினர். மேலும் தனிமையான அறையில் அடைத்து ஆபாசப்படம் பார்க்கச் சொல்லி கட்டாயப்படுத்தினர். இதற்கு நான் சம்மதிக்காத போது போலீசாரும் மருத்துவர்களும் என்னை மிரட்டி கட்டாயப்படுத்தினர். 

மேலும் தகாத முறையிலும் இயற்கைக்கு ஒவ்வாத செயலிலும் ஈடுபடும்படி என்னை வற்புறுத்தினர். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் உரிய பதில் அளிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Check Also

ஊழல் வழக்கில் தண்டனை வழங்குவதில் கருணை காட்டக்கூடாது : உச்ச நீதிமன்றம்

உத்தரபிரதேச மாநிலத்தில் 1992–ம் ஆண்டு, கோபால் சுக்லா என்பவர் மாநில அரசு போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து நடத்துனராக பணி புரிந்தார். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *