ஊழல் வழக்கில் தண்டனை வழங்குவதில் கருணை காட்டக்கூடாது : உச்ச நீதிமன்றம்

உத்தரபிரதேச மாநிலத்தில் 1992–ம் ஆண்டு, கோபால் சுக்லா என்பவர் மாநில அரசு போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து நடத்துனராக பணி புரிந்தார். அப்போது அவர், தான் வேலை பார்த்த பேருந்தில் பயணிகளிடம் டிக்கெட்டுக்கான பணம் பெற்றுக்கொண்டு, அதற்கான டிக்கெட் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

திடீர் சோதனையின் போது சிக்கி கொண்ட அந்த நடத்துனர், உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து தொழிலாளர் நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சுக்லாவுக்கு குறைவான தண்டனை வழங்கப்பட்டது.

இதை எதிர்த்து, மாநில போக்குவரத்துக் கழகம் சார்பில் அலகாபாத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. எனினும், சம்பந்தப்பட்ட அந்த நடத்துனரை பணி நீக்கம் செய்ததற்கு தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நடத்துனரின் பணிநீக்கம் சரியான நடவடிக்கையே  என தீர்ப்பளித்தனர்.

ஊழல் என்பது புற்றுநோய் போன்று நிர்வாகத்தையே பாதிக்கும் என்றும் ஊழல் வழக்குகளில் தண்டனை வழங்கும்போது, நீதிமன்றங்கள் கருணை காட்டக் கூடாது என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Check Also

இறைச்சி விற்பனை மீதான தடையை மக்கள் மீது திணிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்

இறைச்சி விற்பனை மீதான தடையை மக்கள் மீது திணிக்கக் கூடாது என மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், …