மேஜர் முகுந்த் குடும்பத்தினரை கவுரவப்படுத்தினார் அர்ஜுன்!

அர்ஜுன் கதாநாயகனாக நடித்து இயக்கிய ‘ஜெய்ஹிந்த்’ என்ற மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஜெய்ஹிந்த் 2 என்ற பெயரில் எடுத்து வருகிறார்.

இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் மேஜர் முகுந்த் குடும்பத்தினரை கவுரவப்படுத்தினார் அர்ஜுன். விழாவில் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் தந்தை வரதராஜன், தாயார் கீதா வரதராஜன், மனைவி இந்து முகுந்த், மகள் ஆர்ஷியா முகுந்த் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அவர்கள் நான்கு பேருக்கும் நடிகர் அர்ஜுன் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

மேலும் மேஜர் முகுந்தின் தந்தை வரதராஜனுக்கு இயக்குனர் பாலா நினைவுப்பரிசு ஒன்றினை வழங்கினார். விழாவில் இயக்குனர் பாலா கூறும்போது, “அர்ஜுன் இந்த விழாவுக்கு என்னை அழைத்தபோது, எப்படி தவிர்க்கலாம் என்று யோசித்தேன். விழாவில் மேஜர் முகுந்த் வரதராஜன் குடும்பத்தினர் கலந்து கொள்ள இருப்பதாக சொன்னதும், உடனே ஒப்புக்கொண்டேன். நான் இதுவரை எந்த நட்சத்திரத்துடனும் புகைப்படம் எடுக்க நினைத்ததில்லை, ஆனால் முகுந்த் குடும்பத்துடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது” என்று கூறி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Check Also

பிஜேபி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் பாரதிய …

Leave a Reply

Your email address will not be published.