போதைப் பொருள் வைத்திருந்ததாக ஜாக்கி சானின் மகன் கைது

உலக நடிகர்களில் முக்கியமானவரான ஜாக்கி சானின் மகன் ஜெய்சி சான், போதைப் பொருட்களை பதுக்கியக் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெய்சி சானின் இல்லத்தில் நடைபெற்ற சோதனையில், 100 கிராம் எடை கொண்ட மரிஜூவானா என்ற போதைப் பொருளை காவல்துறையினர் கைப்பற்றியதாகவும், இதையடுத்து, ஜெய்சி சானும், அவரது நண்பர் கை கோ சென்டங்கும் போதைப் பொருள் தடுப்புக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஜெய்சி சானுக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவர் போதைப் பொருளை எடுத்துக் கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஜாக்கி ஷான் போதைப்பொருளுக்கு எதிரான தூதராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

ஹஜ் யாத்திரை நெரிசலில் சிக்கி 220 பேர் பலி; காயம் 450

சவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 220 பேர் பலியாகியதாக அஞ்சப்படுகிறது. மேலும் 450 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *