இலங்கையில் நடந்த கொடூரத்தை விவரிக்கும் செய்திகளை பல இணையதளங்கள் வெளியிட்டுள்ளன அதில் உங்கள் பார்வைக்கு:
அளுத்கம மற்றும் தர்ஹா நகர பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகள் புத்த அமைப்பு வெறியர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. மேலும் 3 பள்ளிவாசல்களில் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தி இரத்த வெறியாட்டம் ஆடியுள்ளனர்.
அளுத்கம நகரில் நேற்று (15-6-2014) மாலை பொதுபல சேனாவின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக இன வெறியை தூண்டும் வகையில் பின்வருமாறு பேசியுள்ளனர்.
“எந்தவொரு மரக்கல முஸ்லிமாவது ஒரு சிங்களவன் மீதாவது கையை வைத்தால் அதுவே அவர்களது இறுதி முடிவுக்கு அடையாளம்“, “இந்த நாட்டிலே மரக்கல முஸ்லிம்களுக்கு தலைமைத்துவம் உள்ளது. சிங்கள மக்களுக்கு ஒரு தலைமைத்துவம் இல்லை“,அளுத்கமையில் இடம்பெற்றது ஒரு நிகழ்வல்ல. பல நிகழ்வுகளின் தொடராகும்“, ”நாங்கள் இனவாதிகள் தான். மதவாதிகள் தான்”
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இது போன்ற பேச்சுகளில் இனவெறி ஊட்டப்பட்டு தர்கா நகரில் பேரணியாக சென்று முஸ்லிம்களை தரக்குறைவாக விமர்ச்சித்து கோஷங்களை எழுப்பினர். அதோடு நிற்காமல் முஸ்லிம்களின் கடை மற்றும் வீடுகளை கல் வீசி தாக்க துவங்கியுள்ளனர்.
பேரணியில் சென்றவர்கள் கலவரத்தை துவங்கும் காட்சி:
இதை தொடர்ந்து கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகின்றது. தங்களுக்கு சாதமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை பயன்படுத்திக் கொண்டு புத்த மத இன வெறியர்கள் முஸ்லிம்களின் கடைகள் மற்றும் வீடுகளை தீயிட்டு கொழுத்த ஆரம்பித்தனர்.
தீயில் கருகிய முஸ்லிம்கள் கடைகள் மற்றும் , தாக்குதலுக்குள்ளான முஸ்லிம்கள் கடைகள் மற்றும் வீடுகள்:
பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்ற முஸ்லிம்கள் ஊரடங்கு உத்தரவால் வீட்டிற்கு செல்ல முடியாமல் பள்ளிவாசலிலேயே தங்கி இருந்தனர்.
இதை அறிந்த இன வெறியர்கள் பள்ளிவாலுக்குள் புகுந்து தூப்பாக்கி சூடு நடத்தி அங்கிருந்தத முஸ்லிம்களை பயங்கரமாக தாக்கியுள்ளனர். 500 க்கும் மேற்பபட்ட இன வெறியர்களுடன், முஸ்லிம்கள் இளைஞர்கள் பள்ளிவாசலை மீட்க போராடியுள்ளனர். இந்த தாக்குதலில் 3 முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது மேலும் பல்வேறு முஸ்லிம்களின் படுகாயமடைந்துள்ளனர்.
பள்ளிவாசலில் நடந்த தாக்குதல் – புகைப்படங்கள்:
இந்த பள்ளிவாசல் தாக்குதலில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தவர்கள்:
பற்றி எரியும் வீடுகள்:
இந்த இன வெறியர்கள் பச்சிளம் குழுந்தையையும் விட்டு வைக்கவில்லை. தலையில் வெட்டு காயத்துடன் பச்சிளம் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு வரும் பெற்றோர்கள்:
வீட்டில் இருந்த ஒருவரை தலையில் இரத்தம் வடிய வடிய கொலைவெறியுடன் தாக்கியது:
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை இலங்கை தாகா நகர் பகுதியில் அதிகரித்ததை தொடர்ந்து முஸ்லிம் குடும்பங்கள் தங்களது சொந்த நகரிலேயே அகதிகளாய் ஜாமிஆ நளீமியா வளாகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
1500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தஞ்சம் புகுந்துள்ளாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து மீடியாக்கள் செய்திகள் வெளியிட வேண்டாம் என இலங்கை அரசு உத்தரவு பிறப்பித்துள்ளாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தர்கா நகர் வன் முறை தாக்குதல் குறித்து இலங்கை அமைச்சர் ரவுப் ஹக்கீம் அவர்கள் அளித்துள்ள தொலைபேசி பேட்டி ஒன்று வெளியாகியுள்ளது.
இதில் பேட்டியில் அரசாங்கம் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு அளிக்க தவறி விட்டது, பெண்கள் குழுந்தைகளுக்கு பாதுகாப்பு இன்னனும் உறுதி செய்யப்படவில்லை, பதட்ட நிலை தொடர்ந்து நீடிக்கின்றது, இந்த வன்முறைக்கு யார் பொறுப்பு எனக் கூறியுள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டி:
விடுதலை புலிகலையே விரட்டி அடித்த இலங்கை அரசு ஏன் இந்த வன்முறையை தடுத்து நிறுத்தவில்லை என நடுநிலையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.