பா.ஜ.க. வேட்பாளர் கடத்தப்பட்டதாக அக்கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் பொய் தகவல் தெரிவித்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் ஜோதி நிர்மலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-6-9-2014 அன்று மாலை பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில தேர்தல் ஆணையரை, மாநில தேர்தல் ஆணையத்தில் நேரில் சந்தித்து மனு அளித்து, பின்னர் ஒரு பத்திரிகைக்கு பேட்டியும் அளித்தபோது, …
மேலும் படிக்கபாஜக எம்எல்ஏவை சுட்டுக் கொலை செய்ய முயற்சி: தலைநகர் டில்லியில் பரபரப்பு
ஷாதரா தொகுதி சட்ட மன்ற பாஜக உறுப்பினர் ஜிதேந்தர் சிங் ஷன்டியை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல மர்ம நபர் முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹெல்மெட் அணிந்தபடி புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு ஜிதேந்தர் வீட்டுக்கு வந்த மர்ம நபர், மூன்று முறை துப்பாக்கியால் சுட முயன்றபோதும் அவரது குறியில் இருந்து ஜிதேந்தர் சிங் தப்பினார். அவரது வீட்டு வாயில் அருகே மேல் தளப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் …
மேலும் படிக்கஅ.தி.மு.க பொதுச் செயலாளராக 7வது முறையாக ஜெயலலிதா போட்டியின்றி தேர்வு!
அ.தி.மு.க பொதுச் செயலாளராக 7வது முறையாக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் பொறுப்புக்கான தேர்தல் அறிவிப்பு கடந்த 19.8.2014 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி, வேட்பு மனுக்கள் 20.8.2014 முதல் 24.8.2014 வரை தலைமைக் கழகத்தில் பெறப்பட்டது. அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், முதல்வர் ஜெயலலிதாவுக்காக மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. பெறப்பட்ட வேட்பு மனுக்கள் அனைத்தும் கட்சியின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப சரியாக அமைந்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளர், கட்சியின் …
மேலும் படிக்கதனிக்கட்சி தொடங்குகிறாரா நடிகர் ரஜினிகாந்த்?
தமிழக அரசியலில் புதிய திருப்பமாக நடிகர் ரஜினிகாந்த் விரைவில் தனிக்கட்சி தொடங்க இருக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார். என்ற பேச்சு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இது தொட்ர்பாக தனக்கு நெருக்கமானவர்களிடம் கலந்தாலோசித்து வருவதாகவும் கூடிய சீக்கிரம் அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடைசியில் ஒரு வழியாக புலி வந்துருமோ?
மேலும் படிக்கஆம்னி பஸ்களில் கட்டணக் கொள்ளையை இனியும் அரசு அனுமதிக்கக் கூடாது: ராமதாஸ்
மக்களுக்கான பொதுப்போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ள ஆம்னி பேருந்துகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதை இனியும் அனுமதிக்கக்கூடாது. எனவே, தனியார் பேருந்துகட்டண ஒழுங்குமுறை ஆணையத்தை அமைத்து ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை முறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகட்டணம் 10 முதல் 20 % வரை உயர்த்தப்படுவதாகவும், இக்கட்டண உயர்வு வரும் ஒன்றாம் தேதி முதல் …
மேலும் படிக்கஅத்வானி, ஜோஷியின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வருகிறதா?
இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின், உயர்மட்ட அதிகாரக் குழுவிலிருந்து மூத்த தலைவர்களான அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். மாற்றி அமைக்கப்பட்டுள்ள புதிய குழு இன்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் இணைந்து பாஜகவை உருவாக்கியவர்கள் என்று கருதப்படும் அத்வானி, ஜோஷி ஆகியோர் இனி கட்சியின் வழிகாட்டிகளாக இருப்பார்கள் என்று கட்சியின் அறிவிப்பு கூறுகிறது. பாரதிய ஜனதா கட்சியின் உயர்மட்ட அதிகாரக் குழுவில் அத்வானி, …
மேலும் படிக்கசமஸ்கிருத வாரம் ஏற்புடையது அல்ல தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு
CBSC பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மத்திய அரசு அண்மையில் சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதற்கு தமிழகத்தில் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், இந்திய அரசு, மத்திய மனித …
மேலும் படிக்கமோடியின் விமானத்துக்கு குறி வைக்கப்பட்டதா? சுப்ரமணிய சுவாமி சந்தேகம்
பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் இலக்கு வைக்கப்பட்டதோ என்று பாரதிய ஜனதாவின் சுப்பிரமணிய சுவாமி சந்தேகம் கிளப்பியிருக்கிறார். இது தொடர்பாக தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி, இந்தியாவுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிறைய எதிரிகள் இருப்பது ஒன்றும் ரகசியமானது அல்ல. அண்மையில்தான் பிரிக்ஸ் மாநாடு முடிந்தது. அம்மாநாட்டின் மூலம் சர்வதேச புவிசார் அரசியலில் உலக பொருளாதாரத்தில் கோலோச்சுகிற நாடுகளுக்கு சவால்விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியாவின் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டினால் ஓஐசியானது …
மேலும் படிக்கபொது பட்ஜெட் – 2014- 2015ன் முக்கிய அம்சங்கள்.
பொது பட்ஜெட் – 2014- 2015ன் முக்கிய அம்சங்கள். மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்துள்ள 2014- 2015ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில், விவசாயிகளுக்கான வட்டி மானியத் திட்டம் தொடரும். 5 லட்சம் நிலமில்லா விவசாயிகளுக்கு நபார்ட் வங்கி மூலமாக மத்திய அரசு நிதியுதவி. வேளாண் துறையில் நபார்ட் வங்கி மூலமாக நீண்ட கால முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் ரூ.5,000 கோடி ஒதுக்கீடு. விவசாயிகளுக்கு தனி தொலைக்காட்சி சேனல் …
மேலும் படிக்கஅரசியல் அரைவேக்காடு யார்?- கருணாநிதிக்கு ஜெயலலிதா பதில்
தி.மு.க. தலைவர் கருணாநிதி, தனது அறியாமையை மூடி மறைக்க, “அரைவேக்காடு யார்?” என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டார். வாய்மூடி மவுனியாக இருந்து முட்டாள் என்று பிறர் நினைப்பது, வாயைத் திறந்து அனைத்து ஐயப்பாடுகளையும் நீக்கி, தான் ஒரு முட்டாள் தான் என்பதை வெட்ட வெளிச்சமாக்குவதைவிட மேலானது” என்ற பழமொழிக்கு ஏற்ப மீண்டும் வாயைத் திறந்து, தான் ஒரு அரைவேக்காடு தான் என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறார் …
மேலும் படிக்க